அடை மற்றும் சாதத்திற்கு சுவையான அவியல்: கேரள ஸ்டைலில் செய்வது எப்படி?

சமையல்

Mixed vegetable curry:

தென்னிந்திய உணவுகளில் கேரளா உணவுகள் தனித்துவமான சுவை கொண்டவையாக உள்ளன. இந்த உணவுகளில் அவியில் மிகவும் புகழ் பெற்ற சைடிஷ்ஷாக உள்ளது. இந்த கேரளா ஸ்டைல் அவியல் தயார் செய்வதில் சிலர் சிரம படுகின்றனர். இதற்காகவே மிகவும் ஈஸியான செய்முறையை இங்கு வழங்கியுள்ளோம்

தேவையான பொருட்கள்:

அவிக்க:

வாழைக்காய் – 1

கேரட் – 2

முருங்கைக்காய் – 1

பீன்ஸ் – 10

சேனைக் கிழங்கு – 150 கிராம்

கொத்தவராய் (ஈத்திகாய்) – 10

அவரைக் காய் – 10

வெள்ளை பூசணி – 150 கிராம்

கத்திரிக்காய்- 3

தேங்காய் 1

பச்சை மிளகாய் – 5

சீரகம் – 1 ஸ்பூன்

உப்பு

மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்

தேங்காய் எண்ணெய் – 3 கரண்டி

கறிவேப்பிலை

தயிர் – சிறிய 1 கப் (அதிக புளிப்பு இல்லாதது).

நீங்கள் செய்ய வேண்டியவை:

முதலில் அவிக்க என தனியாக வழங்கப்பட்டுள்ள காய்கறிகளை சுத்தமான நீரில் நன்கு அலசி கழுவி கொள்ளவும்.

பிறகு அவற்றை குழம்பிற்கு வெட்டுவது போல நீளமாக வெட்டிக் கொள்ளவும். அதன் பின்னர், ஒரு காடாய் எடுத்து அதில் வெட்டி வைத்துள்ள காய்கறிகளைச் சேர்க்கவும்.
(பூசணியை தவிர, மற்ற காய்கறிகள் ஓரளவு வெந்த பிறகு சேர்க்கவும்). அவை வேக உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி நன்கு வேக வைக்கவும்.

இதற்கிடையில், அவியலுக்கான மசாலா தயார் செய்யலாம். அதற்கு சீரகம், பச்சை மிளகாய், தேங்காய் ஆகியவற்றை ஒரு மிக்சியில் இட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

காய்கறிகள் நன்றாக வெந்த பிறகு அவற்றில் அரைத்து வைத்துள்ள இந்த தேங்கய் கலவையை சேர்க்கவும். அதோடு தயிரும் சேர்த்து 2 நிமிடங்களுக்கு வேக விடவும். 2 நிமிடத்திற்கு பிறகு கருவேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய் ஊற்றி கிளறி மீண்டும் வேக வைக்கவும்.

அதன் பிறகு அவற்றைத் திறந்து பார்த்தால் சுவையும் மணமும் உள்ள கேரளா ஸ்டைல் அவியல் தயராக இருக்கும். இவற்றை உங்கள் சாதத்துடன் பரிமாறி ருசிக்கவும்.