அட கடவுளே .. சற்றுமுன் பிரபல முன்னணி அஜித் விஜய் பட நடன இயக்குனர் தி டீர் ம ரணம் !! க டும் சோ க த்தில் மூ ழ் கிய திரையுலகம் !! கத றிய லும் ரசிகர்கள் !!

சினிமா

இயக்குநர் கதிர் இயக்கத்தில் 1996ம் ஆண்டு வெளியான காதல் தேசம் திரைப்படத்தின் மூலம் நடன இயக்குநராக அறிமுகமானார் கூல் ஜெயந்த். அந்த படத்தில் இடம்பெற்ற கல்லூரி சாலை மற்றும் முஸ்தபா முஸ்தபா பாடலில் இடம்பெற்ற நடன அசைவுகள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.

பிரபல நடன சகோதரர்களான பிரபுதேவா மற்றும் ராஜுசுந்தரம் மாஸ்டர்களின் அணியில் நடன கலைஞராக பணியாற்றியவர் கூல் ஜெயந்த். காதல் தேசம் திரைப்படத்தின் மூலம் நடன இயக்குநராக அறிமுகமான இவர் கலாபாவன் மணி நடிப்பில் வெளியான மலையாள திரைப்படமான பாம்பூ பாய்ஸ் படத்திற்கு நடனம் அமைத்துள்ளார்.

அதன் பிறகு மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்ட மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்கள் படங்கள் பலவற்றுக்கு நடன இயக்குநராக பணியாற்றி உள்ளார்.

நடன இயக்குநர்கள் பலரும் நடிகர்களாக மாறியுள்ளனர். பிரபுதேவா, ராஜுசுந்தரம், ராகவா லாரன்ஸ் என ஏகப்பட்ட உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். 800 படங்களுக்கு மேல் நடன கலைஞராக பணியாற்றிய கூல் ஜெயந்த் Kozhi Raja எனும் படத்தில் நடிகராக அறிமுகமானார்.

பிரபல நடன இயக்குநர் கூல் ஜெயந்த் திடீரென உடல்நலக் குறைவு காரணமாக காலமான செய்தியை அறிந்த சினிமா பிரபலங்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மலையாள சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களும் கூல் ஜெயந்தின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.