ஆடை மாற்றும் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ஸ்ரீதேவியின் மகள்…!! வாய் பிளந்த ரசிகர்கள்…!!

சினிமா

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இப்பொழுது ஆடை மாற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பாலிவுட்டில் இளம் கதாநாயகியாக கலக்கி வருபவர் நடிகை ஜான்வி கபூர். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஆவார். தமிழில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த கோலமாவு கோகிலா திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்து வரும் இவர் அதற்காக பஞ்சாபில் 45 நாட்கள் தஞ்சமடைந்து படப்பிடிப்பை முடித்துக் கொடுத்து வருகிறார். படப்பிடிப்பு தளத்திலிருந்து ஏற்கனவே பல புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் அதில் நயன்தாராவைப் போலவே நடை உடை

பாவனைகள் என அனைத்தையும் மாற்றியுள்ள ஜான்வி கபூருக்கு இந்தத் திரைப்படம் மிகப்பெரிய பெயரையும் புகழையும் பெற்றுத் தரும் என நம்பப்படுகிறது. தடாக் திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக இந்திப் படத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜான்வி கபூர் அந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக கலவையான வெற்றி பெற்றது என்றே சொல்ல வேண்டும். அதன் பிறகு ஒரு சில திரைப் படங்களில் சிறப்பு தோற்றத்தில் வந்து சென்ற ஜான்வி கபூருக்கு சென்ற ஆண்டு வெளியான குன்ஜன் சக்ஸேனா:

தி கார்கில் கேர்ள் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது. நாயகிக்கு முக்கியத்துவம் தரும் இந்த திரைப்படத்தில் ராணுவ பெண் விமானியாக ஜான்வி கபூர் நடித்திருந்தார். கார்கில் போரில் உண்மையாக நடந்த சம்பவங்களை மையமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. குன்ஜன் சக்ஸேனா: தி கார்கில் கேர்ள் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளையே தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஜான்வி கபூர் இப்போது கோலமாவு கோகிலா ஹிந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார்.

இதற்கு குட்லக்ஜெர்ரி என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து மீண்டும் பிரபல மலையாள திரைப்படம் ஒன்றின் இந்தி ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இளம் நடிகையான இவரை சோஷியல் மீடியாக்களில் அதிக அளவு ரசிகர்கள் பின்பற்றுவதால் எக்கச்சக்கமான படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இதனால் நாளுக்கு நாள் இவரின் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகிக்கொண்டே போக படு போஸ்ட்டுகளை வெளியிட்டு வைரலாவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் இப்பொழுது ஷூட்டிங் ஸ்பாட்டில் மேக்கப் அறையில்

உடைமாற்றும் புகைப்படங்களை வெளியிட்டு அன்றும் இன்றும் என பதிவிட்டுள்ளார். இதில் முதல் புகைப்படத்தில் அரைகுறை ஆடையில் தொடையழகு மொத்தமும் தெரிய கால் மேல் கால் போட்டுக்கொண்டு சாப்பிட்டவாறு மேக்கப் செய்து தயாராகிக் கொண்டிருக்கிறார். இரண்டாவது புகைப்படத்தில் ஜிகு ஜிகு உடையில் அழகு கலை நிபுணர்களுடன் ஆடை மாற்றும் போது அசவுகரியமாக ஃபீல் செய்துகொண்டு நிற்கிறார். இவ்விரு புகைப்படங்களையும் பதிவிட்டு அன்றும் இன்றும் என ஜாலியாக கேப்ஷன் போட்டுள்ளதைப் பார்த்த ரசிகர்கள் லைக்குகளை இஷ்டத்துக்கு போட்டு வழக்கம்போல வர்ணித்து வர இந்த போஸ்ட் இப்பொழுது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.