இத்தனை கோடி சொத்தையும் பிரித்து கொடுக்கும் அமிதாப் பச்சனின் அதிரடி முடிவு !! ஆடிப்போன திரையுலகினர்கள் !!

சினிமா

பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றால் அது அமிதாப் பச்சன் தான். பல சூப்பர் ஹிட் படங்களை நடித்து ரசிகர்களின் மனதில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர்.இவர் சினிமா துறையில் பண்ணாத சாதனைகளே இல்லை. அது மட்டும் இல்லாமல் அவர் வாங்காத விருதுகளே இல்லை என்றும் சொல்ல அளவிற்கு புகழின் உச்சத்தில் உள்ளவர்.

நடிகர் அமிதாப் பச்சன் அவர்கள் பிரபல திரைப்பட நடிகை ஜெய பாதுரியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஷ்வேதா நந்தா என்ற மகளும், அபிஷேக் பச்சன் என்ற மகனும் உள்ளார்கள்.அபிஷேக் பச்சன் தந்தையை போலவே பாலிவுட்டில் முன்னணி நடிகர். இவர் உலக அழகி ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்துகொண்டார். இது அனைவருக்கும் தெரிந்ததே.

இந்நிலையில், அமிதாப் பச்சனுக்கு சமீப காலமாகவே உடல் நிலை பிரச்சினை இருந்து வருகிறது. தற்போது அமிதாப் பச்சனுக்கு வயது 76 ஆகிறது. மேலும், நடிகர் அமிதாப் பச்சன் அவர்கலுக்கு 1982 ஆம் ஆண்டு ஒரு படத்தின் படப்பிடிப்பு போது விபத்து ஏற்பட்டு உள்ளது.

இதனால் அவருக்கு உடனடியாக சில ஆபரேஷன் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறினார்கள். இதற்கு நிறைய ரத்தம் தேவைப்படும் நிலையில் இருந்தது. மேலும், ஆபரேஷனும் நல்ல முறையில் முடிவடைந்தது.

ஆனால், அந்த ரத்தத்தில் ஹெப்படீஸ் பி என்ற வைரஸ் இருந்து உள்ளது என்று தெரிய வந்து உள்ளது. இதனால் பின்னர் நாளடைவில் செல்லச் செல்ல நடிகர் அமிதாப் பச்சனுக்கு இந்த வைரஸினால் கல்லீரலில் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. தற்போது இந்த பிரச்சனையால் நடிகர் அமிதாப் பச்சனுக்கு 75% கல்லீரல் செயலிழந்து உள்ளது என்ற தகவல் ஏற்கனவே வெளியாகி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.

தற்போது அமிதாப் பச்சன் அவர்களுடைய மொத்த சொத்து மதிப்பு 2, 800 கோடி ரூபாய் . இந்த சொத்துகளை இரண்டு பிள்ளைகளுக்கும் சரிசமமாக பிரித்து தர முடிவு செய்துள்ளாராம்.மேலும், அதற்கான வேலைகளையும் தற்போது தீவிரமாக செய்து வருகிறாராம். அமிதாப் பச்சனின் நிலையை கண்டு சினிமா வட்டார ரசிகர்கள் அனைவரும் மிகுந்த சோகத்தில் உள்ளார்கள்.