இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது சிம்புவும் இல்லையாம் !! இந்த முக்கிய சினிமா பிரபலமாம்… அவரின் புகைப்படத்தைப் பார்த்ததும் உச்ச கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்…!!

சினிமா

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு வகையான ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பாகிறது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மனதில் பெரிதளவு வரேவேற்பை பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சி பிக்பாஸ். இது ஆரம்பத்தில் பிற மொழிகளில் ஒளிப்பரப்பாகி வந்தது.

இதற்கு அங்கு கிடைத்த பெருமளவு பிரபலத்தை தொடர்ந்து தமிழிலும் ஒளிப்பரப்ப முடிவு செய்தனர். அவ்வாறான நிலையில் தமிழில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி முதன் முதலாக ஒளிப்பரப்பபட்டது. இந்நிலையில் இதற்கு தமிழ் மக்களிடையே எந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கும் எண்ணி வந்த வகையில் இதை மக்களை பார்க்க வைப்பதற்கு ஏதாவது முன்னணி சினிமா பிரபலம் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டும் என எண்ணியது.

இதன் காரணமாக தென்னிந்திய சினிமாவின் முன்னணி பிரபல நடிகர் உலகநாயகன் கமல் ஹாசன் அவர்கள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் வடிவமைப்பை தாண்டி இவருக்காகவே இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்தவர்கள் பலர். அந்த வகையில் தனது தேர்ந்த பேச்சாலும் கம்பீரத்தாலும் கமல் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நான்கு வருடங்களாக தொகுத்து வழங்கி வருகிறார்.

இவ்வாறு இருக்கையில் இதன் நான்காவது சீசன் வெற்றிகரமாக முடிவடைந்து ஐந்தாவது சீசனுக்கு மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில் அடுத்த சீசனை கமல் அவர்கள் தொகுத்து வழங்க போவதில்லை எனவும் அவருக்கு பதிலாக லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு அவர்கள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவதாகவும் பல தகவல்கள் வந்த வண்ணம் இருந்தது. மேலும் இந்த சீசன் பிக்பாஸ் விஜய் டிவிக்கு பதிலாக கலர்ஸ் சேனலில் ஒளிப்பரப்பாக போகிறது எனவும் தகவல்கள் பரவி வந்தது.

இந்நிலையில் இதற்கு எல்லாம் முற்று புள்ளி வைக்கும் விதமாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் என்டிமோல் நிறுவனம் பதில் கொடுத்துள்ளது. அதில் என்டிமோல் நிறுவனம் பிக்பாஸ் நிகழ்ச்சியயை விஜய் டிவியில் ஒளிப்பரப்பு செய்வதற்கு பத்து வருடம் ஒப்பந்தம் போட்டுள்ளது. அதன் மூலம் இனி வரும் ஆறு சீசனும் விஜய் டிவியிலே ஒளிப்பரப்படும். மேலும் கமலுக்கு பதிலாக வேறு நடிகர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவதாக வந்த தகவலும் வதந்தியே.

இந்த சீசனையும் கமல் அவர்களே தொகுத்து வழங்கப் போகிறாராம். மேலும் அதற்கான அட்வான்ஸ் தொகையை கூட வாங்கி தற்போது நடந்த தேர்தல் செலவுக்கு பயன்படுத்தி விட்டார் என அவரது மக்கள் நீதி மய்யம் கட்சி முக்கிய நிர்வாகி ஒருத்தர் பேட்டி கொடுத்துள்ளார். இதன் காரணமாக இந்த சீசனையும் கமல் அவர்களே தொகுத்து வழங்க போகிறார் என்பது ஊர்ஜிதம் ஆகியுள்ளது.