இந்த பாட்டி. வயசானாலும், பாட்டிக்கு ஸ்டைலும், திறமையும் இன்னும் குறையவே இல்லீங்க…! வயது வெறும் எண் தான்! 81 வயது பாட்டியின் உடற்பயிற்சி வீடியோ வைரல்..!!

வாழ்க்கைமுறை வைரல் வீடீயோஸ்

ஜெர்மனியை சேர்ந்த 81 வயது பாட்டி, டிக்டாக்கில் செய்யும் உடற்பயிற்சி வீடியோக்கள் வைரலாக பரவி வருகின்றன. வயது என்பது அந்த பாட்டி எடுக்கும் ப்ளங்ஸ் மற்றும் புல் அப்களை பார்த்தால் உங்களுக்கு தெரியும்..

ஜெர்மனியை சேர்ந்த எரிகா ரிஷ்கோ என்ற 81 வயது பாட்டி, கொரோனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது, வீட்டிலேயே முடங்கி கிடக்காமல் ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணி கொண்டிருந்தார். பொழுதுபோக்கு செயலியான டிக்டாக் அவருக்கு வழிகாட்டி உள்ளது. ஊரடங்கின் போது, தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை எரிகா வெளியிட, அது வைரலாக பரவியது. இதனை தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட வீடியோக்களை இதுவரை அவர் பதிவிட்டுள்ளார். சுமார் 1.25 லட்சம் பேர் அவரை டிக்டாக்கில் பாலோ செய்கிறார்கள்.

அவர் வெளியிடும் வீடியோக்களில் பெரும்பாலானவை உடற்பயிற்சி வீடியோக்களே. மேலும், டான்ஸ் ஸ்டெப்களையும் வீடியோவாக பதிவிடுகிறார். அவருடன் இணைந்து அவரது கணவரும் டான்ஸ் ஆடுகிறார். கேமராமேனாக அவரது மகள் செயல்படுகிறார். எந்தவித சிரமமுமின்றி, அவர் ப்ளங்ஸ் மற்றும் புல் அப்களை எடுக்கும் வீடியோக்களை பார்த்த இளசுகளே வாயை பிளக்கின்றனர்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘நான் இப்போது மிகவும் தன்னம்பிக்கையாக இருப்பதாக உணர்கிறேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். மற்றவர்களை ஆரோக்கியமாக மாற்ற எனது வீடியோக்கள் தூண்டுகோலாக இருக்கும் என நம்புகிறேன். சோம்பேறிதனத்தை விடுத்து சுறுசுறுப்பாக இருங்கள். ஒரு இடத்திலேயே அமர்ந்து கொண்டு இருக்காதீர்கள்’’ என அட்வைஸ் மழை பொழிகிறார் இந்த பாட்டி. வயசானாலும், பாட்டிக்கு ஸ்டைலும், திறமையும் இன்னும் குறையவே இல்லீங்க…!