இந்த லாக்டவுனில் ஜாக்லினுக்கு கல்யாணமாம்!!! மாப்பிள்ளை யார் தெரியுமா! அவரே சொன்ன செய்தி…

சினிமா

வண்ணத்திரை மற்றும் சின்னத்திரை பட்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால்? பிரபலங்கள் அனைவரும் சமூக வலை தளங்களே கதியென சுற்றித்திரிகிறார்கள்… அதுவும் இன்ஸ்டாவில் தான் பல பிரபலங்கள் இருக்கிறார்கள்.

ஏதாவது முக்கியமான பதிவினை சொல்லும் போதே டிவிட்டரை உபயோக்கிறார்கள்.. நாம் எப்படி இருபத்தி நேரம் வாட்ஸப்பில் சுற்றி திரிந்தாலும், ஏதாவது அபிசியல் என்று வந்தால்? மெயிலை உபயோகிக்கிறோமோ? அப்படி… அதற் கு ஏற்றவாறு இன்ஸ்டாகிராமும் பல ஆப்சன்களை அப்டேட் செய்து கொண்டே இருக்கிறது..

லைவ்-வில் வந்து தான் பதிலளிக்க வேண்டும் என்று இல்லாமல். ரசிகர்களிடம் கேள்விகளை கேட்டு அதற்கான பதில்களை வீடியோவாகவோ? இல்லை புகைப்படம் மூலமாகவோ சொல்லுவது சாதாரணமாகிவருகிறது.. அப்படித்தான், தேன் மொழி சீரியல் கதாநாயகியும், விஜய் டிவி தொகுப்பாளினியுமான நடிகை ஜாக்லின் அதை விளையாடியிருக்கிறார்..

அதில் ஒரு ரசிகர்… எப்போது பிக்பாஸ் ஆரம்பிக்கும் என்று கேட்க அதற்கு அவரோ? எனக்கு நான் நடிக்கிற தேன்மொழி சீ ரி ய லே எப்ப ஆரம்பிக்கும்-னு தெரியாது.. இதுல என்கிட்ட வந்து இந்த கேள்வியை கேட்கிறீங்க என சொல்லியிருக்கிறார்.. அடுத்ததாக.. நீங்கள் புகழுக்கு தங்கையாக நடிப்பீர்களா? என்று கேட்க…

முதல் கேள்வியே இப்படியா? நான் எப்படிங்க அவருக்கு தங்கச்சி யாலாம் நடிக்க முடியும்? என்ன பார்த்தா அவருக்கு தங்கச்சி மாதிரியா இருக்கு? என அவர் சொல்லியிருக்கிறார்… அடுத்து, நீங்கள், அஷ்வின், ரக்க்ஷன் இருவரில் யாருக்கு ஜோடியாக நடிப்பீர்கள் என் அவர் கேட்க

அதற்கோ.. கண்டிப்பாக ரக்க்ஷன் கூட தான்.. அது மட்டுமில்ல.. அவன் என்னோட பெஸ்ட் பிரண்ட்.. அவனுக்கு தான் என்ன தெரியும், ஒரு வேளை யாராச்சும் கேட்டா கூட? அவன் தான் சரின்னு சொல்வான்.. என அந்த இடத்தில் அவர்களின் நல்ல நட்பை பதிவிட்டிருக்கிறார்…

இந்த லாக்டவுன் முடியிறதுக்குள்ள கல்யாணம் பண்ணிடுவீங்களா? என ஒரு ரசிகர் கேட்க.. அதற்கு அவரோ.. கண்டிப்பா.. இந்த லாக்டவுன் முடியிறதுக்குள்ள. நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்.. முன்னாடியே லாக்டவுன்-னு தெரிஞ்சிருந்தா? அம்மா அப்பாகிட்ட மாப்பிள்ளை பார்க்க சொல்லியிருக்கலாம்? என அவரே சொல்லியிருக்கிறார்..

இப்படி பல கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லியதில், நிச்சயம் ஜாக்லின் அரேஞ்ச் மேரேஜ் தான் செய்வார் என தெள்ளத்தெளிவாக தெரிகிறது.. இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திடுங்கள்…