இன்னும் சில நாட்களில் பிரபல சினிமா மற்றும் சீரியல் நடிகை-யை மணக்கும் பிக்பாஸ் சினேகன்!!! 16 வயசு வித்தியாசமா? புகைப்படத்தை பார்த்து வி யந்துபோன ரசிகர்கள்..!!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணிப் பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். 700-க்கும் மேற்பட்ட படங்களில் சுமார் 2500-க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். ஆனால் இவருடைய பல பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகின்றன.

ஆனால் இவர் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான். அதன் மூலம் அவருக்கு மேலும் பல வாய்ப்புகள் குவிந்திருந்தது… தற்போது அரசியலிலும் ஈடுப்பட்டு வருகிறார். இதுவரை, திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்தார். தற்போது அவருக்குத் திருமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ளனர்.

ஜூலை 29-ம் தேதி கன்னிகா என்ற பெண்ணைத் திருமணம் செய்யவுள்ளார் சினேகன். அவர் சன் டிவியில் ஒளிப்பரப்பான கல்யாண வீடு சீரியலில், நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.. அவர்கள் இருவருக்கும் பதினாறு வயசு வித்தியாசமாம்.. இதனை சினேகன் தரப்பிலிருந்து இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

ஆனால், சினேகனுக்குத் திருமணம் நடைபெறவிருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உறுதிப்படுத்தியுள்ளார். அவரின் திருமண அழைப்பிதழை அவரே நேரில் வந்து கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கவிஞர் சினேகனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்…