எங்க வீட்டுக்கு குட்டிப்பையன் வந்தாச்சு!!!.. தொகுப்பாளின் அர்ச்சனாவின் மகள் சாரா கையில் குழந்தையுடன் வெளியிட்ட பதிவு? குழப்பத்தில் நெட்டிசன்கள் !!!

சினிமா

ஒரு காலத்தில் அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளை அர்ச்சனாவிற்காக மட்டுமே பலர் பார்த்தனர்… அர்ச்சனாவின் மீது மக்கள் வைத்திருந்த கண்ணோட்டம் பிக்பாஸ் செல்வதற்கு முன் வேறு.. தற்போது வேறு… விஜய் டிவியிலே யே நம்ம வீட்டு கல்யாணம் என்ற நிகழ்ச்சியை டிடி க்கு பின் அர்ச்சனா மிக அழகாக தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்…

அதன் பின் சில காரணங்களால், விஜய் டிவியிலிருந்து, ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு சென்றார்.. அங்கேயும் அவருக்கு ஏக போக வரவேற்பு இருந்தது.. அவருக்கு மட்டுமல்ல, அவர் மகள் சாரா-க்கு மே நல்ல வாய்ப்பு கிடைத்தது.. எத்தனைப் பேருக்கு கிடைக்கும், தன்னோடே தன் மகளும் சரிக்கு சமமாக நின்று வெற்றிபெறுவதை பார்ப்பதற்கு? இருவரும் சேர்ந்து நிறைய விளம்பரப்படங்கள் எல்லாம் நடித்திருந்தனர்…

இந்நிலையில், திடீரென ஜீ தமிழ் தொலைக்காட்சியை விட்டுவிட்டு, மீண்டும் விஜய் டிவிக்கே வந்து சேர்ந்தார்… தொகுப்பாளினியாக வருவார் என்று எல்லோரும் எதிர்பார்க்க, அவரோ? பிக்பாஸ் சீசனின் ஒரு போட்டியாளராக கலந்துக் கொண்டார்… அதன் பின் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த நல்ல பெயர்கள் எல்லாம் காற்றில் கலைந்து, ட்ரோல் களையும், மீம்களையும் சந்திக்க ஆரம்பித்தார்…

இந்நிலையில் தற்போது அவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.. அதில் அவரும், அவர் தங்கையும், மகளும் சேர்ந்து பல வீடியோ பதிவுகளை பதிவிட்டிருந்தனர்.. இந்நிலையில் கடந்த வாரம் பல சர்ச்சைகளை சந்தித்தார்… அவர் பதிவிட்ட பாத்ரூம் டூர் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் பார்வையாளர்களை பெற்று பல ட்ரோல்களையும், மீம்களையும் தந்தது…

இப்படியாக இவர் தற்போது இன்ஸ்டாவில் மிக ஆக்டிவாக இருக்கும் நிலையில், அவர் மகள் சாரா கையில் ஒரு குழந்தையுடன் இருக்கும் வீடியோவை பதிவிட்டு. மை டூ பேபிஸ் என்று குறிப்பிட்டுள்ளார்.. அது அவர் தங்கை மகனின் வரவை செல்லமாக சொல்லியிருக்க, அதுவும் சர்ச்சைக்கு உள்ளாகி நிற்கிறது…

பொதுவாக ஒரு பழமொழி சொல்வார்களே? பிடிக்காத மருமகள், கைபட்டாலும் குற்றம், கால் பட்டாலும் குற்றம்-னு.. இப்ப அந்த நிலைமையில தான் நம்ம அர்ச்சனா வும் இருக்காங்க.. அவங்க என்ன பண்ணாலும் அதை வச்சி கன்டன்ட் பண்ணிடுறாங்க… சரி இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும்,,.. நீங்க எல்லாரும் பாதுகாப்பா இருங்க அது தான் ரொம்ப முக்கியம்.. மேலும் இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திடுங்கள்…