நடிகை மீஷா கோஷல் தமிழ் சினிமாவில் அதிகபடியான துணை வேடங்களில் நடித்து வந்தவர். மீஷா குறும்படங்களின் வாயிலாக சினிமாவில் நடிக்க துவங்கியவர். 

இவர் சினிமாவில் நடித்து கொண்டிருக்கும் போது கூட பல துணிச்சலான கதாபாத்திரங்கள் குறும்படங்களில் கிடைத்த போது நடித்து அசத்தியவர். நீச்சல் போட்டிகளில் ஆர்வம் உடைய இவர் சென்னையில் நடைபெற்ற ஒரு நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமின்றி செலிபிரிட்டி பேட்மிட்டன் லீக் என்று நடைப்பெற்ற சினிமா பிரபலங்கள் கலந்து கொண்ட பேட்மிட்டன் போட்டிகளிலும் கலந்து கொண்டு தனது சிறந்த திறமையை காண்பித்து அசத்தினார். 

மிஷா கோஷல் ‘நான் மகான் அல்ல’ திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அட்லீ படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தார். பின் சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.
ஆனால் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. தற்போது சிறு வேடமாக இருந்தாலும் தனக்கு கிடைத்த உள்ள கதைகளை தேடி நடித்து வரும் மிஷா கோஷலுக்கு என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு தேடி வந்தது.

அதற்கு பின் தான் திரிஷா இந்த கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதிக்க, அவருக்கு இருக்கும் மார்க்கெட்டை மனதில் வைத்து அந்த கதாபாத்திரத்துக்கு கதையில் மற்றம் செய்து அந்த படத்தை இயக்கினார் கெளதம் மேனன்.