எத்தனை கோடி செலவானாலும் பரவாயில்லை அந்த நடிகை தான் வேணும் !! விடாது அடம்பிடிக்கும் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் !! அட அந்த டிமாண்டு நடிகை யார் தெரியுமா…?

சினிமா

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவி பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களை ஒளிபரப்பி பல கலைஞர்களை மக்கள் மத்தியில் அடையாளம் காட்டி வருவதோடு அவர்களுக்கு நல்ல ஒரு பிரபலத்தை ஏற்படுத்தி அவர்களை வெள்ளித்திரையில் நடிகர் நடிகைகளாக ஜொலிக்க செய்து வருகிறார்கள். அந்த வகையில் இந்த சேனலில் கலக்கபோவது யாரு எனும் நகைச்சுவை நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டிலை வென்றதோடு பல மக்களின் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதோடு, அதே சேனலில் தொகுப்பாளராக தனது திரைபயனத்தை தொடங்கி, பின்னர் இதன் மூலம் சினிமா வட்டாரத்தில் பிரபலமாகி, படங்களில் நடிகராக அறிமுகமாகி, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருவதோடு தனக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் தான் பிரபல முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன்.

இவருக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இவருக்கு ரசிகர்களாக உள்ளார்கள் இந்நிலையில் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். இப்படி இருக்கையில் தற்சமயம் பிரபல முன்னணி நடிகையான நயன்தாரா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கோலமாவு கோகிலா. இந்த படத்தை இயக்கிய பிரபல இளம் முன்னணி இயக்குனரான நெல்சன் இயக்கத்தில் தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் டாக்டர் எனும் படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இந்த படத்தை தொடர்ந்து பல இளம் இயக்குனர்களுடன் இயக்கத்தில் டான் , சிங்கபாதை போன்ற பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இவ்வாறு பிசியாக நடித்து வரும் சிவா அவர்கள் தமிழை தொடர்ந்து தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கடந்த வருடம் தெலுங்கில் குறைந்த செலவில் எடுத்து அதிக லாபத்தை எடுத்த வெற்றி படமான ஜாதி ரத்னலு என்ற படத்தை இயக்கிய பிரபல இயக்குனரான அனுதீப் என்பவர் சிவகார்த்திகேயன் வைத்து இந்த படத்தை இயக்க போகிறாராம்.

மேலும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க பல நடிகைகளை யோசித்து வந்த நிலையில் பிரபல நடிகையான ரஷ்மிகாவை நடிக்க வைக்கலாம் என சிவா அவர்கள் கூறியுள்ளாராம். ராஷ்மிகா ஏற்கனவே தமிழ் தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருவதோடு தெலுங்கில் சினிமாவில் முன்னணி நடிகைகளில் முதன்மையானவராக உள்ளார் இப்படி இருக்கையில் இவரை நடிக்க வைத்தால் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என சிவா அவர்கள் ஐடியா கொடுத்துள்ளார்.

ஆனால் அவருடைய சம்பளமே ஐந்து கோடி கேட்கிறார் என்பதால் படக்குழுவினர் யோசிக்கும் நிலையில் சிவா எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை அவரை ஓகே பண்ணுங்கள் என படக்குழுவினருக்கு கட்டளை போட்டு வருகிறாராம். இதன் காரணமாக ரஷ்மிகாவின் கால்சீட்டுக்கு காத்துகொண்டு இருக்கிறர்களாம் படக்குழுவினர். இந்நிலையில் இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரளாகி வருகிறது.