“எனக்கு இந்த விருது தேவையில்லை” என தூக்கிப்போட்ட, பாலாஜி முருகதாஸ்!!! அதற்கு ஆதரவு கரம் நீட்டிய அனிதா சம்பத்!! என்ன பிரச்சனை தெரியுமா?

சினிமா

தமிழில் முன்னனி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான, பிக்பாஸ் நிகழ்ச்சி, மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது, அதிலும் அந்த போட்டியாளர்களை வைத்து வரும் சர்ச்சைகள் எல்லாம் மிகவும் சகஜமான ஒன்று…

கடந்த சில மாதங்களுக்கு முன் தான், பிக்பாஸ் சீசன் 4 முடிவடைந்தது.. அதில் கலந்துக் கொண்ட, ஆண் போட்டியாளர்களை விட… பெண் போட்டியாளர்கள் தான், அதிகம் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டனர்… அதிலும் குறிப்பாக அர்ச்சனா, சம்யுக்தா, அனிதா சம்பத், போன்றவர்கள் மிகவும் சர்ச்சைக்களில் சிக்கினர்..

நிகழ்ச்சி முடிந்த பிறகும் கூட, பல போட்டியாளர்கள், எந்த ஒரு பேட்டிக்கும் அனுமதி கொடுக்கவில்லை… இன்று வரை அவர்கள் பல சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டே இருக்கின்றனர்… அதில் ஒரு போட்டியாளராக கலந்துக் கொண்டவர் தான்.. பாலாஜி முருக தாஸ்..

இப்போது கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற, ஒரு பிரபல விருது நிகழ்ச்சியில், அவருக்கு விருது அளிக்கப்பட்டது… இப்போது அதன் ஒளிப்பரப்பை, ஒரு முன்னனி சேனல், கடந்த ஞாயிறு அன்று ஓளிப்பரப்பினார்கள்.. அதில் பாலாஜி முருகதாஸ், விருதை வாங்கியதோடு மேடையில், சில யூடியூப் ரிவியூ செய்தவர்களை, விமர்சித்துள்ளார்… ஆனால் அதை, கட் செய்து ஒளிபரப்பு செய்துள்ளார்கள்..

அதைப்பார்த்து கோபமடைந்த பிக்பாஸ் பாலாஜி… நாங்க எல்லாரும், உங்களோட விமர்சனங்களை இப்ப வரைக்கும், எதிர்கொண்டு வருகிறோம்.. ஆனால் நீங்க என்னோட ஒரு இரண்டு நிமிட விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள மாட்டீங்களா? அப்படின்னா? எனக்கு இந்த விருது வேண்டாம்.. நான் இதை திருப்பிக் கொடுக்கிறேன்.. நான் எந்த வொரு பின்புலமும் இல்லாம, முன்னுக்கு வந்தவன், எனக்கு இது வேண்டாம் என அவர் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்..

அதைப்பார்த்த அனிதா சம்பத், கரெக்டா சொன்னீங்க பாலாஜி… சீக்கிரம் இவங்களோட முகமூடி கலற போகுது.. மற்ற போட்டியாளர்களை, தப்பா பேசி, பணம் கொடுத்து பேட்டி எடுத்த மேட்டரும் சீக்கிரம் வெளிய வரும்.. நேர்மையா விளையாண்ட யாருமே, நிகழ்சி முடிந்த பிறகு பேட்டி கொடுக்கவில்லை, அப்படியே கொடுத்திருந்தாலும், உள்ளே இருப்பவர்களை பற்றி தவறாக கூறவில்லை…

ஆனால் சில இருபதாயிரம், முப்பதாயிரம் என பணத்தை பெற்றுக் கொண்டு பேசியிருக்கிறார்கள்.. வீட்டுக்குள்ள இருக்கிறப்ப, நேரடியா மோத முடியாம? இப்படி கோழைத்தனமா வெளிய வந்து பண்ணிருக்காங்க,.. ஆனா இது எல்லாத்தையும் தாண்டி நான் 85 நாள் உள்ளே இருந்ததை பெருமையா நினைக்கிறேன்.. உங்களோட இந்த முடிவுக்கும் நான் பெருமைப்படுறேன் என பதிவிட்டுள்ளார்.. மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்..