ஒரே ஒரு போட்டோவால் அனைவரையும் உ ரு க வைத்த பிக்பாஸ் வனிதா! இவர்களுக்கு மட்டுமே தெரியும் வ லி யு ம் வே த னை யும்.!

சினிமா

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் மூன்றாம் பாகத்தில் போட்டியாளராக கலந்துக்கொண்டவர் முன்னாள் நடிகை வனிதா. பிரபல நடிகரான விஜயகுமாரின் மகளான இவரை போட்டியின் ஆரம்பத்தில் யாருக்கும் பிடிக்காமல் போனதற்கு காரணம் இவருடைய பிடிவாதமும் முன்கோபமும் தான்.

இவர் சொந்த வாழ்க்கையிலும் பல கஷ்டங்களை அனுபவித்து வந்த நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் ஆரம்பத்தில் எல்லாருக்கும் எதிரியாகவே காணப்பட்டார். அதுமட்டுமின்றி பார்வையாளர்களும் இவர் மீது வெ றுப்பாகவே இருந்தனர்.

ஆனால் போகப் போக அவரது தைரியமான பேச்சாலும் நேர்மையான நடத்தையாலும் தமிழ் நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்தார். பிக் பாஸ் போட்டியில் அவர் தோற்றுப்போனாலும் அந்த போட்டியில் பங்கேற்றதற்கு பிறகு பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் நாடகத்தில் நடிப்பதுமட்டுமின்றி அவரே ஒரு டிவி சேனல் ஆரம்பிக்கப்போவதாகவும் அறிவித்திருந்தார்.

கொரோனாவால் ஏற்பட்ட இந்த ஊடரங்கு நேரத்தில் அவரது தாயுடன் எடுத்த புகைப்படமும் தனது முதல் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் பொழுது நடிப்பு திலகம் சிவாஜி கணேசனுடன் எடுத்த புகைப்படத்தினையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இதில் அவர் மம்மி மிஸ் யூ மா என குறிப்பிட்டுள்ளார். இது பலருக்கும் உருக்கமாக இருந்தது. இந்த பதிவு தற்போது அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.