கமலின் அறிவிப்பால் தரையை தட்டி கண்ணீர் வடித்த தருணம்! வெளியேறிய நபர் இவர் தான்..? கமல் போட்டுக் காட்டிய குறும்படம்.!!

செய்திகள்

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் மக்கள் என் பக்கம் இல்லைன்னாலும், வெளியே இருக்க மக்கள் என் பக்கம் இருப்பாங்கன்னு ஆரி நம்பியதை போலவே இந்த வாரம் அவர் முதலிலேயே சேவ் ஆகி உள்ளார். பிறகு ஆரி, பாலா இணைந்த காட்சிகளை ஹவுஸ்மேட்களுக்கு குறும்படமாக கமல் போட்டுக் காட்டுகிறார். ஆரியையும் பாலாவையும் வைத்துக் கொண்டு இந்த சீசனில் ஒரு மினி விக்ரம் வேதா படத்தையே பிக்பாஸ் டீம் நடத்தி உள்ளது.

சண்டை கோழிகளாக எகிறும் இருவரும் அடுத்த நொடியே சமாதானம் ஆவதும், மீண்டும் சண்டையிட்டுக் கொள்வதுமாக இந்த சீசனின் டிஆர்பி கிங்குகளாகவும் இருவரும் திகழ்கின்றனர். ஆரி ஒவ்வொரு முறையும் ஹவுஸ்மேட்களுக்கு அறிவுரை கூறும்போது அதை பிடிக்காமல், அவரை ரம்பம், பிளேடு என ஹவுஸ்மேட்கள் ஒதுக்கி வைத்தனர்.

பாலா எப்போதும் ஆரி தன்னை மட்டம் செய்கிறார் என்றே அவருடன் சண்டை போட்டு வந்தார். இந்நிலையில், ஆரி தனக்கு கொடுத்த அட்வைஸுக்கு நன்றி கூறியும் அவருடன் போட்ட சண்டைகளுக்கு மன்னிப்பு கேட்ட பாலா, வெளியே போனாலும் கண்டிப்பா அட்வைஸ் தேவைப்படும் போது உங்களுக்கு போன் பண்ணுவேன் என பாலா பேசிய குறும்படத்தை கமல் போட்டுக் காட்டினார்.

பாலாவும், ஆரியும் தனியாக பேசிக் கொண்ட அந்த காட்சிகளை மற்ற ஹவுஸ்மேட்களும் பார்க்க வேண்டும் என கமல் போட்டுக் காட்டினார். ரம்யாவின் வாவ் ரியாக்‌ஷன், ஷிவானி பாலாவை பார்த்து விடும் லுக், ரியோவின் ரியாக்‌ஷன் என அந்த குறும்படம் மத்த ஹவுஸ்மேட்களுக்காக போடப்பட்டது என்பது தெளிவாகி உள்ளது

மீண்டும் மக்கள் சக்தியை நம்பிய ஆரியை மக்கள் இந்த முறையும் கை விடவில்லை. மக்கள் ஆரிக்கு அதிக வாக்குகளை அள்ளிக் கொடுத்து முதல் ஆளாய் காப்பாற்றியுள்ளனர். கமல் தான் கா ப்பாற்றப்பட்டோம் என கூறியதை கேட்ட ஆரி, பிக்பாஸ் வீட்டின் தரையில் கையை வைத்து ஆ க் ரோ ஷ மா க த ட்டினார்.

சோமசேகர் டிக்கெட் டு ஃபினாலேவை பெற்றுக் கொண்டு சேவ் ஆன நிலையில், ஆரி அதிக ஓட்டுக்களுடன் சேவ் ஆகி உள்ளார். ஆரிக்கு அடுத்து பாலாவும் அதிக ஓட்டுக்களை பெற்று சேவ் ஆகியுள்ளார். இதேவேளை, மக்கள் எ திர்ப்பார்த்ததை போல ஷிவானி வெளியேறினார்.