கரகாட்டகாரன் கனகாவை துரத்தி துரத்தி காதலித்த நடிகரின் மகன் !! யாரும் எதிர்பாராமல் இறுதியில் நடந்த சம்பவம் !! வெகுநாள் கழித்து வந்த உண்மை !!

சினிமா

தமிழ் சினிமாவில் 90-ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் கனகா. இவர் கரகாட்டக்காரன் படத்தில் மூலம் மிகப் பெரிய பெயரையும் பாராட்டையும் பெற்றார்.

அதன் பிறகு தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக மாறினார். குடும்பப்பாங்கான வேடமாக இருந்தாலும் சரி, கவர்ச்சி கலந்த வேடமாக இருந்தாலும் சரி, ஒரு கலக்கு கலக்கிவிடுவார்.

கனகாவுக்கு என்றே ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. இதனையடுத்து பல வெற்றிப்படங்களை கொடுத்த கனகாவுக்கு குறிப்பிட்ட ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு உதவியாளராக பிரபல நடிகர் எஸ் ஏ நடராஜன் என்பவரின் மகன் ராமச்சந்திரன் என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

அவர், கனகாவுக்கு அனைத்து எடுபிடி வேலைகளையும் பார்த்துக் கொண்டிருந்தவர் ஒரு கட்டத்தில் கனகாவை ஒருதலையாக காதலிக்க ஆரம்பித்தார். அந்த கால கட்டங்களில் கனகா சினிமாவில் உச்சத்தில் இருந்தார்.

ஆனால், அந்த உதவி இயக்குனர் சமீபத்தில் தன்னுடைய தந்தையை இழந்து சோற்றுக்கே கஷ்டப்படும் நிலைமையில் சுற்றி வந்துள்ளார். இதைக்கண்டு பல திரைப்பிரபலங்களும் எச்சரித்த நிலையில் விடாமல் கனகாவை துரத்தி துரத்தி காதலித்து வந்துள்ளார்.

அவருடைய படப்பிடிப்புக்கு செல்வது, கனகாவின் வீட்டின் முன்பு நின்று அவரைப் பார்க்கத் துடிப்பது என ஏகப்பட்ட வேலைகள் செய்துள்ளார். இதனால், கோபமடைந்த கனகா உடனடியாக காவல்துறையிடம் கூறி ராமச்சந்திரனை எச்சரித்துள்ளார்.

அதன்பிறகு கனகா கிடைக்க மாட்டார் என்கிற சோகத்தில் கிட்டத்தட்ட ஒரு வாரம் படுத்த படுக்கையாக இருந்த ராமச்சந்திரன் இறுதியில் மாரடைப்பு வந்து இறந்து விட்டாராம். அதன் பிறகு அதை நினைத்து கனகா வருத்தப்பட்டுள்ளாராம்