கைதி பட தீனாவுடன் கலக்கப்போவது யாரில் கலக்கிய சரத்திற்கு காதல் திருமணம் !! பொண்ணு யாரு தெரியுமா ?? நிச்சயதார்த்த புகைப்படம் இதோ !!

சினிமா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற நிகழ்ச்சி.

இந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் காமெடி வில்லன் நடிகர் மொட்டை ராஜேந்திரன் போல பேசி நடித்து பிரபலமானதோடு தன் தோற்றத்தையும் அவர் போலவே மொட்டை அடித்து பலரையும் கவர்ந்தவர் ஷரத்.

இவரும் தீனாவும் இணைந்து படைத்த காமெடிகள் பலரையும் சிரிக்க வைத்து மகிழவைத்தன. ஆனால் இதே சேனலில் ஷரத் பல வருடங்களுக்கு முன் வந்த கனா காணும் காலங்கள் சீரியலிலும் நடித்திருந்தாராம்.

ஆனால் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியால் கிடைத்த வரவேற்பை கொண்டு அவர் சிபிராஜ் நடிப்பில் வெளியான சத்யா படத்திலும் நடித்திருந்தார்.

சீரியல்களிலும் நடித்து வரும் ஷரத்துக்கும் கடந்த மார்ச் 6 ல் கிருத்திகா என்ற பெண்ணுடன் திருமண நிச்சய தார்த்தம் நடைபெற்றுள்ளது.