கொரோனாவால் நான் இறந்தால் எனது சொத்துக்களை இவர்களுக்கு மட்டுமே பிரித்து கொடுங்கள்..!! இமெயில் அனுப்பிய ட்ரீம்ஸ் நடிகை..!!

சினிமா

நான் இறந்தால் என்னுடைய சொத்துக்களை இவர்களுக்கு கொடுத்து விடுங்கள் என பிரபல நடிகை ஒருவர் இமெயில் அனுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனுஷ் நடித்த ’ட்ரீம்ஸ்’ மற்றும் பிரசாந்த் நடித்த ‘புலன் விசாரணை 2’ உள்பட ஒருசில தமிழ் திரைப்படத்திலும், ஒருசில மலையாளம், கன்னடம் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்தவர் நடிகை பாருல் யாதவ்.

இவர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போது தான் பிழைக்க மாட்டோம் என்று முடிவு செய்து, ஒருவேளை தான் கொரோனாவால் இறந்து விட்டால் தனது இரண்டு சகோதரிகளுக்கும் சொத்துக்களை பிரித்துக் கொடுத்து விடுங்கள் என இமெயில் அனுப்பி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது ’கடந்த ஏப்ரல் மாதம் எனக்கும் என்னுடைய குடும்பத்தார் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.

நல்லவேளையாக என்னுடைய அம்மாவுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படவில்லை. நான் மூன்றாவது மாடியில் தனிமைப்படுத்தி கொண்டேன். என் அம்மாதான் எனக்கு சாப்பாடு செய்து கொடுத்தார். நள்ளிரவில் திடீரென்று 100 டிகிரிக்கும் மேல் காய்ச்சல் இருக்கும். அப்போது எல்லாம் நான் இனிமேல் பிழைக்க மாட்டேன் என்றே நினைப்பேன். பலமுறை நான் டாக்டருக்கு போன் செய்து ஆலோசனை கேட்பேன்.

மேலும் ஒருவேளை நான் இறந்து விட்டால் என் சொத்துக்களை இரண்டு சகோதரிகளுக்கும் சரிசமமாகப் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று இ-மெயில் அனுப்பினேன். அந்த இமெயிலை பார்த்து எனது சகோதரிகள் அழுதார்கள். உனக்கு ஒன்றும் ஆகாது என்று நம்பிக்கை கொடுத்தார்கள். >ஒருநாள் நள்ளிரவில் திடீரென 103 டிகிரி காய்ச்சல் வந்தது. என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை என்று டாக்டரிடம் போன் செய்து கூறுவேன்.

அப்போது அவர்தான் எனக்கு நம்பிக்கை கொடுப்பார். நம்பிக்கையுடன் இருந்தால் கண்டிப்பாக இந்த நோயில் இருந்து மீளலாம் என்று அவர் கூறுவார். அவர் கொடுத்த நம்பிக்கையில் தான் நான் இன்று உயிரோடு இருக்கிறேன் என்று கூறினார். அவருடைய இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.