சம்பளம், சாப்பாடு இல்லாமல் டிரைவர் வேலை பார்க்கும் பிரபல நடிகர் !! இணையத்தில் அவரே வெளியிட்ட புகைப்படம்..!! அடப்பாவமே !!

சினிமா

தமிழ் சினிமாவில் திடீரென பிரபலமான நடிகர்கள் என ஒரு லிஸ்ட்டே போடலாம்.விஜய் ஆண்டனி முதல் ஜிவி பிரகாஷ் வரை திடீரென நடிகர்கள் ஆனவர்கள்தான்.அந்தவகையில் பாய்ஸ் படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனவர் நகுல்.

ஆனாலும் காதலில் விழுந்தேன் திரைப்படத்தில் வந்த ‘அட்ரா ரா நாக்க முக்கா ‘ பாடலின் மூலம் ABC என 3 சென்டர்களில் அடித்து நொறுக்கினார் நகுல், படமும் இந்த ஒரு பாடலினால் வெற்றியும் பெற்றது. இவர் பிரபல 90’s நடிகை தேவயானியின் தம்பி இவர் என பலருக்கும் தெரிந்ததே.

பிறகு மாசிலாமணி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படங்களில் உள்ள நடனத்தால் ரசிகர்களை கவனிக்க வைத்தார். தற்போது டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார்.மேலும், இவர் பல படங்களுக்கு பாடல்களை பாடியுள்ளார்.

அந்நியன் படத்தில் காதல் யானை என்ற பாடலை இவர் தான் பாடினார். கஜினி, வேட்டையாடு விளையாடு, வல்லவன், காதலில் விழுந்தேன், கந்தகோட்டை, வல்லினம் ஆகிய படங்களில் பாடியுள்ளார்.

இந்நிலையில் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிரைவர் கெட்டப்பில் தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு. அவர் மனைவிக்காக டிரைவராகிவிட்டேன், சம்பளம் இல்லை, இது அடிமைத்தனம், சாப்பாடு இல்லை, நல்ல உடை இல்லை, மோசம் பாஸ், நம்புங்க என நக்கலாக பதிவிட்டுள்ளார்.