சற்றுமுன் சில்க் ஸ்மிதாவை அறிமுகம் செய்த இயக்குனர் திடீர் மரணம்…. க தறி அ ழுத குடும்பத்தினர்…அ தி ர் ச் சியில் திரையுலகம்…!!!

சினிமா

ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த ஒரே நாயகி சில்க் ஸ்மிதா மட்டுமே. இவரின் அழகை கண்டு வியக்காத ஆண்களே இல்லை. பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் இவரது காந்த கண்களும், திராவிட நிறமும் அனைவரையும் கவர்ந்திழுத்தது. வண்டிச்சக்கரம் எனும் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதைப்போல் 1981ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான இணையை தேடி படம் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தின் இயக்குனர் ஆண்டனி ஈஸ்ட்மேன் தான் சில்க் ஸ்மிதாவை முதல் முறையாக மலையாள சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்தார். இதனை அடுத்து சில்க் மலையாளத்தில் பல படங்களில் நடித்திருந்தார்.

ஆண்டனி ஈஸ்ட்மேன் கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து உயிரிழந்தார். அவர் மறைவுக்கு மலையாள திரைபிரபலங்கள், ரசிகர்கள், சமூகவலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதலில் ஈஸ்ட்மேன் என்ற ஸ்டூடியோவை தொடங்கிய அந்தோணி, முதன் முதலில் புகைப்படக் கலைஞராக தான் தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். இதனால் அவரது பெயர் ‘ஈஸ்ட்மேன்’ அந்தோணி என்று மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.