சற்றுமுன் பிறந்த தன் குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்த சாண்டி மாஸ்டர்!!! அச்சோ சோ கியூட்!!! அழகிய பதிவு!!!

சினிமா

விஜய் டிவி மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் சாண்டி மாஸ்டர். பெரும்பாலும், நடிகை நடிகர்களை மட்டுமே நினைவுக் கொள்ளும் காலகட்டத்திலேயே.. அவரின் நடனத் திறைமையாலும், பேச்சுத் திறமையாலும், மக்கள் மனதை கவர்ந்தவர்… இவர் திரைப்படம், மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கும், நடன இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்…

இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு, தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கினார். இவருக்கும், கவினுக்கும், இடையில் இருந்த நட்பு, மிக பெரிய அளவில் பேசப்பட்டது என்றுக் கூட சொல்லலாம்… இவருக்கு ஏற்கனவே காஜல் என்ற நடிகையை திருமணம் செய்துக் கொண்டார்..

அதன் பின், முதல் திருமணத்தை முறித்துக் கொண்ட இவர்! Sylvia என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட, சாண்டிக்கு, லாலா எனும் அழகிய பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை, சமீபத்தில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது.. பிக்பாஸ் மூலமாக மற்றவர்கள் பிரபலமடைந்ததை விட, இந்த லாலா பாப்பா.. மிக பிரபலமடைந்தது…

மேலும் சமீபத்தில் தனது மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதை சாண்டி அறிவித்திருந்தார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் தனது வீட்டில், நெருங்கிய நண்பர்களை மட்டும் அழைத்து, தனது மனைவிக்கு வளைகாப்பு நடத்தியிருந்தார்..

இந்நிலையில் இன்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.. அதை அவர் குழந்தையின் பிஞ்சு விரல்களோடு தன் கை சேர்த்தது போல் ஒரு அழகிய புகைப்படத்தை வெளியிட்டு எங்க வீட்டுக்கு ராஜா வந்தாச்சு என ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்>..