சற்றுமுன் மருத்துவமனையில் உயிருக்கு போராடும் பிரபல நடிகை…. கதறி அழுத ரசிகர்கள்…பிரார்த்தனை செய்யும் குடும்பத்தினர்…!!

சினிமா

தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வந்த சரண்யா சசி தமிழ் மற்றும் மலையாள தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு மூளையில் கட்டி இருந்த காரணத்தில் 11 அறுவை சிகிச்சை செய்தார். இவருக்கு பல நடிகர், நடிகைகள் பண உதவி செய்து வந்தனர்.

இந்நிலையில் சரண்யா சசிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மே மாதம் 23ம் தேதி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வரும் இவரது உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாகவும், செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவரது தோழியும், மலையாள நடிகையான சீமா ஜி. நாயர் தெரிவித்துள்ளார். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பல சரண்யா சசிக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.