சுற்றுலா பயணிகளின் கண் முன்னே இரையை வேட்டையாடிய சிங்கம் !! டுவிட்டரில் வை ரலாக ப ரவி வரும் வீடியோ காட்சி ..!!

வைரல் வீடீயோஸ்

திறந்த வாகனத்தில் காட்டின் அழகை ரசித்தபடி சென்ற சுற்றுலா பயணிகளுக்கு மிக அருகில், சிங்கம் ஒன்று அதன் இரையை வேட்டையாடும் வீடியோ டுவிட்டரில் வை ரலாக ப ரவி வருகிறது.

சிங்கங்கள் வழக்கமாக வேட்டையாடுவதற்கு இரண்டு முறைகளைப் பயன்படுத்துகின்றன. ஒன்று இரையை மறைந்திருந்து சந்தர்ப்பத்திற்கு காத்திருந்து வேட்டையாடுவது. மற்றொன்று இரையை துரத்தி தன் வலிமையை பயன்படுத்தி அதனை வேட்டையாடுவது. இப்படி சிங்கம் ஒன்று தனது இரையை துரத்தி வேட்டையாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வை ரலாக ப ரவி வருகிறது.

ஒரு ஜங்கிள் சஃபாரி செய்த சுற்றுலா பயணிகள் குழுவுக்கு, மறக்க முடியாத, நினைத்தாலே சிலிர்ப்பை தரும் அனுபவம் ஒன்று அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. அந்த வீடியோவில், திறந்த ஜீப்பில் சுற்றுலா பயணிகள் காட்டின் பாதையில் வாகனத்தை நிறுத்தி இருக்கின்றனர். அப்போது இரையை துரத்தி வரும் சிங்கம் ஒன்று, ஜீப்பின் மிக அருகில், இரையை பாய்ந்து பிடிக்கிறது. திகிலூட்டும் இந்த வீடியோவில், ஜீப்பில் இரு ஆண்கள் இருப்பது தெரிகிறது. மூன்றாவது நபர் இதனை வீடியோ எடுத்து கொண்டிருக்கிறார்.