சூப்பர் ஸ்டார் ரஜினி தற்பொழுது பெங்களூரில் உள்ள வீட்டில் தனிமையாக உள்ளாரா ?? வெளியான தகவலை கேட்டு அ தி ர்ச்சியான ரசிகர்கள் ..!!

சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஜினியின்றி லக்னோவில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து ரஜினி இளம் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில் ரஜினி ஒரு படத்தை முடித்துவிட்டு தனது படத்தில் நடிப்பதற்கு முன் இளமையமலைக்கு சென்றுவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

ஆனால் இந்த முறை கொரோனோ லாக்டெளன் காரணமாக அவர் இமயமலைக்கு செல்லவில்லை.

மேலும் பெங்களூருவில் உள்ள அவரது வீட்டுக்குத் தனியாகச் சென்றிருக்கிறார் ரஜினி. அவருடன் அந்த வீட்டில் யாரும் இல்லையாம்.

இன்னும் சில நாட்கள் அங்கே தியானத்தில் இருந்துவிட்டு ரஜினி சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.