டெய்லியும் ஒரு பிரேக்கிங் நியூஸா? மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகும் பத்மபிரியா!.. காரணம் இதுவா?

Uncategorized சினிமா செய்திகள்

கடந்த வருடம் 2020-ல் இருந்து என்னத்தான் நடக்கிறது? தினமும் ஒரு புயல் கிளம்பிக் கொண்டே இருக்கிறது… அந்த வரிசையில் இப்போது, முன்னால் ஐ ஏ எஸ் அதிகாரி சந்தோஷ் பாபுவை தொடர்ந்து, பத்மபிரியா-வும் விலகல்… கடந்த வாரம் தான், சந்தோஷ் பாபு அவருடைய விலகலை கூறியிருந்தார்.. அதற்குள் இவரும் இப்படி கூறியிருப்பது பல சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது…

இவர் மதுரவாயல் தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கினார்… அந்த தொகுதியில் 30000 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்திருந்தார்… அப்படியிருக்க திடீரென அவர் சில காரணங்களுக்காக, நான் மக்கள் நீதி மையம்  கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன், அதை எனது தொகுதி மக்களுக்கு தெரிவிப்பது என் கடமை, மற்றப்படி எனது களப்பணி எப்போதும் போல தொடரும்.. என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்…

அதைத்தொடர்ந்து கட்சி முதன்மை உறுப்பினர் பகுதியிலிருந்தும் நான் ராஜினாமா செய்துள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். நான் ஸ்ரீ்கமல்ஹாசன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியையும், எதிர்காலத்தில் கட்சி அனைத்து தொகுதிகளிலும் வெற்றிப்பெற விரும்புகிறேன்.. எனது தொகுதி மக்களுக்கும் எனக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் மற்றும் ஒருமுறை என் நன்றியை கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்…

அதைப்பார்த்து பலரும்.. இந்த தீடீர் விலகலுக்கு பின் இருக்கும் உண்மை காரணம் என்ன? என அந்த பதிவில் தங்கள் கருத்துகளை கேட்டு வருகின்றனர்.. மேலும் இது போன்ற சூடான தகவலுக்கு எங்கள் தளத்துடன் இணைந்திடுங்கள்…