தாஸ் பட ஹீரோயின் ரேனுகாமேனன் தற்போது எங்கு? எப்படி இருக்கிறார் தெரியுமா? தெரிந்தால் ஆச்சர்யபடுவீர்கள்!

சினிமா

தமிழ் திரையுலகில் காணாமல் போன நடிகைப் பட்டியலில் ரேனுகா மேனனும் ஒருவர்… அவருக்கு கேரளாவில் உள்ள ஆலாப்பூலா தான் சொந்த ஊர்… மலையாள வாசியாக இருந்தாலும், மலையாளத்தில் மட்டுமல்லாமல், தமிழ் மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்… மொத்தமே பத்து படங்களில் தான் நடித்திருப்பார்.. ஆனால் அவருக்கு அந்த பத்து படத்திலேயே அவ்வளவு ரசிகர்கள் இருந்தனர்…

தமிழில், தாஸ், கலாபக் காதலன், பிப்ரவரி 14 என்ற சூப்பர் ஹிட் லவ் படங்களில் நடித்து, பல இளைஞர்களின், கிரஸ்-ஸாக அப்போதே இருந்தார்… சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும், இன்றளவுக்கும், மனதில் பதிந்த நடிகைகளில் இவரும் ஒருவர்… இந்த மூன்று படங்களும் இப்போது வரை பல பேரின் பாவரேட் மூவி லிஸ்டில் உள்ளது…

இவர் 2006-ஆம் ஆண்டு அமெரிக்கா மாப்பிள்ளை சூரஜ்-ஜை திருமணம் செய்துக் கொண்டு கலிபோர்னியாவில் செட்டில் ஆகிவிட்டார்… அதன் பின் நடிப்புக்கு முற்றிலுமாக முட்டுக்கட்டை போட்டுவிட்டு, முழுநேர ஹோம் மேக்கர் வேலையில் இறந்க்கிவிட்டார்… அவருக்கு இரண்டு பெண்குழந்தைகள்… அதில் இரண்டாவது பெண் அப்படியே ரேனுகா போல் உள்ளது.. கலிபோர்னியாவில் செட்டில் ஆன பின்னும், தன் குழந்தைகளுக்கு இந்திய கலாச்சாரத்தை-தான் சொல்லிக்கொடுத்து வளர்க்கிறார்… அதுமட்டுமில்லாமல், மூத்தப்பெண் இப்போதே பரதநாட்டியத்தில் பல பரிசுகளை வாங்கி குவித்துக் கொண்டிருக்கிறார்…

சாதாரண சீரியல் நடிகைகள் கூட தங்கள் குழந்தைகளை சால்சா, வெஸ்டர்ன் டான்ஸ் என்று அனுப்பிக்கொண்டிருப்போருக்கு மத்தியில், ரேனுகா, அங்கே ஒரு டான்ஸ் ஸ்கூல்லை நடத்தி வருகிறார்… இதைப்பார்த்து அவர்கள் ரசிகர்கள், ஒருகாலத்தில் கிரஸ் தற்போது அதைவிட பெருமைப்படுகிறேன் என கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்….