நடிகை அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா? அதுவும் மாப்பிள்ளை இந்த முன்னணி கிரிக்கெட் வீரரா? யார் தெரியுமா?

சினிமா

மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் இளம் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இதன் பின் தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

சில வருடங்களாவே நடிகை அனுபமா பரமேஸ்வரன் பிரபல முன்னணி கிரிக்கெட் நட்சத்திமான ஜாஸ்ப்ரிட் பும்ராவை காதலித்து வருகிறார் என்று கி சு கி சுக்கப்பட்டு வருகிறது. இதில் தற்போது ஜாஸ்ப்ரிட் பும்ரா தனக்கு திருமணம் என இங்கிலாந்திற்கு எதிரான போட்டியிலிருந்து விலகி விடுமுறையில் சென்றுள்ளாராம்.

இந்நிலையில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் ‘ சந்தோஷமான விடுமுறை ‘ என்று அதே நேரத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனை வைத்து இருவருக்கும் திருமணம் நடைபெறவிருக்கிறது என்று இணையத்தில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.ஆனால் இதுவரை இருவரும் வாய்யை திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.