நடிகை அனுஷ்கா திருமணம் செய்யப்போகும் பிரபலம் இவர்தான் ?? முதன்முறையாக வெளிவந்த உண்மைத்தகவல் !!

சினிமா

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை அனுஷ்கா. தமிழில் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. கவர்ச்சியில் ரசிகர்களை மயக்குவதில் இவர் கில்லாடி.

தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாக முன்ணணி நடிகையாக இருந்த இவருக்கு இஞ்சி இடுப்பழகி என்ற படத்தின் மூலம் வந்தது ஆப்பு. டெடிகேஷன் என்று கூறிக்கொண்டு கிடுகிடுவென உடல் எடையை கூட்டி குண்டானார் அம்மணி.

படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆகி விட்டாலும், அம்மணியின் உடல் முன்பு போல இல்லை. குண்டாக இருந்த அவர் இப்போது உடல் எடை குறைத்தகாரணத்தால் மேனியின் பளபளப்பு போய் விட்டது. இதனால், சொல்லிக்கொள்ளும்படி வாய்ப்புகளும் இல்லை.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, பாகுபலி நடிகர் பிரபாசு உடன் காதல் என கிசுகிசுக்கப்பட்டதை இருவருமே மறுத்தனர்.இதையடுத்து, தனது திருமணம் குறித்து வெளியாகும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம், திருமண பொறுப்பை பெற்றோரிடமே விட்டு விட்டதாக அனுஷ்கா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தெலுங்கு இயக்குனர் பிரகாஷ் கோவலமுடிக்கும், அனுஷ்காவுக்கும் விரைவில் திருமணம் என தற்போது புதிய தகவல் பரவி வருகிறது. அனுஷ்கா நடித்த இஞ்சி இடுப்பழகி படத்தை இயக்கிய பிரகாஷ் கோவலமுடி, ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.