நடிகை சமந்தாவை பி ரிந் தது ஏன்? நாக சைதன்யா வீடியோவால் பெரும் ப ரப ரப்பு.. அ திர் ச்சி யில் ரசிகர்கள் ..!!

சினிமா

நடிகை சமந்தாவை பி ரிந் தது ஏன்? நாக சைதன்யா வீடியோவால் பெரும் ப ரப ரப்பு.. அ திர் ச்சி யில் ரசிகர்கள் ..!!
நடிகரும், பிரபல நடிகை சமந்தாவின் (Samantha) முன்னாள் கணவருமான நாக சைதன்யா (Naga chaitanya), சமீபத்திய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. ஏனெனில் இதில் தன்னுடைய மனைவி சமந்தாவை குத்தி காட்டி பேசுவது போல், மறைமுகமாக தங்களின் விவாகரத்து குறித்த காரணத்தை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாக சைதன்யாவும், அவரது காதல் மனைவியும் நடிகையுமான சமந்தா ரூத் பிரபுவும் கடந்த அக்டோபர் 02 தேதி, இருவரும் ஒருமனதாக பிரிந்ததாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

இவர்களது பிரிவிற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், சரியான காரணம் எதும் தெரியாமல் இருந்தது.

இந்நிலையில் இதுவரை தன்னுடைய விவாகரத்து குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் மௌனம் காத்து வந்த நாக சைதன்யாவின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அதில் அவர் தனது கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். “நான் எல்லா வகையான பாத்திரங்களையும் தேர்வு செய்யும் போது அது ஒரு போதும், எனது குடும்பத்தையும், எங்கள் கௌரவத்தையும் பாதிக்கக் கூடாது என்பதில் கவனமாக இருப்பேன். எனது குடும்ப உறுப்பினர்களை சங்கடப்படுத்தும் வேடங்களில் நடிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

இவர் கூறி இருக்கும் பதிலை வைத்து, சமந்தா திருமணத்திற்கு பிறகு.. தொடர்ந்து சர்ச்சையான வேடங்களை தேர்வு செய்து நடித்தது தான் விவாகரத்துக்கு காரணமா? என ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.