படக்குழுவினருக்காக சிக்கன் சமைத்துக்கொடுத்த பிரபல முன்னணி நடிகர் !! அட அஜித் இல்லப்பா இது வேற ஆளு !! ஆச்சரியத்தில் ரசிகர்கள் !!

சினிமா

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக இருப்பவர் அருண்விஜய்.இவரது நடிப்பில் பல முக்கியமான அப்படங்கள் அதிரிபுதிரி வெற்றி அடைந்துள்ளது.அஜித்துடன் நடித்த என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அவரது மார்க்கெட் எங்கேயோ பொய் விட்டது.

அருண் விஜய்யின் ‘யானை’ படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. யானை படத்தை ஹரி இயக்கி உள்ளார். இப்படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Actor Arun Vijay at Vaa Press Meet

நேற்று முன்தினம் அவர் படக்குழுவினருக்காக ஒரு வீட்டில் சமையல் செய்துள்ளார்.அதனை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அருண் விஜய் இப்போது ரசிகர்கள், பொதுமக்களுடன் அதிகம் பழக ஆரம்பித்துள்ளார்.

யானை படப்பிடிப்புக்காக அவுட்டோர் சென்ற போது ரோட்டுக்கடையில் சாப்பிட்டதுடன் அங்கு மீன் சமையல் செய்தார். அந்த கடை நடத்தும் பெண்மணியுடன் புகைப்படம் எடுத்து பதிவிட்டார்.