பாவடை தாவணியில் ஜொலிக்கும் நடிகை ஐஸ்வர்யாராயின் மகள்: அழகில் அம்மாவையே ஓவர்டேக் செய்யும் ஆராத்யாவின் புகைப்படங்கள் இதோ…

சினிமா

இந்திய மக்களுக்கு உலக அழகி ஐஸ்வர்யா ராய் என்றாலே தெரியாதவர் எவரும் இல்லை அந்த அளவிற்கு இந்தியா விற்கு பெருமை தேடி தந்தவர்.இவர் 1994ஆம் ஆண்டு உலகி அழகி போட்டியில் பங்கு பெற்று அந்த போட்டியில் வெற்றி பெற்றார்.இவர் அந்த பட்டதை வென்ற பிறகு இவருக்கு பல படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.நடிகை ஐஸ்வர்யா அவர்கள் தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்து இருந்தாலும் இன்றளவும் பெரும் ரசிகர்கள் மனதில் இடத்தை பிடித்தவர்.இவர் தமிழில் 1997ஆம் ஆண்டு மணி ரத்தினம் இயக்கத்தில் வெளியான இருவர் மூலம் அறிமுகமாகினார்.

பின்பு படிப்படியாக படங்களில் நடிக்க தொடங்கினர்.இவர் பின்பு கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜீன்ஸ், எந்திரன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் பிறகு ஹிந்தி மொழியில் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன் அவர்களது மகனை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.தற்போது இவர் மணி ரத்தினம் இயக்கி வரும் பொன்னியன் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.

உலக அழகி ஐஸ்வர்யா ராய்யின் மகள் ஆராத்யாவின் புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

தான் எந்த மாதிரியான உடை அணிந்திருக்கிறாரோ அதே போன்று தனது மகளுக்கு அணிவித்து இருவரும் ஜோடியாக வலம் வந்தனர்.

இந்நிலையில் இவரது மகள் ஆராத்யா நன்றாக வளர்ந்துவிட்ட நிலையில், தாவணி அணிவித்து எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

மேலும் ஐஸ்வர்யாவின் உயரத்தை விரைவில் தொட்டுவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.அழகில் அம்மாவையே ஓவர்டேக் செய்யும் ஆராத்யாவின் புகைப்படங்கள் இதோ….