பிக்பாஸ் புகழ் லாஸ்லியா குக் வித் கோமாளி பிரபலத்தை திருமணம் செய்து கொள்ளபோகிறாரா !! அப்ப அவரு மாப்பிள்ளை இல்லையா என கலாயிக்கும் நெட்டிசன்கள் !!

சினிமா

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் அனைத்துமே மக்கள் மத்தியில் வெகு பிரபலம். அந்த அளவில் இந்த சேனலில் கடந்த நான்கு வருடங்களாக வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி வரும் உலக அளவில் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியை மக்கள் மத்தியில் பார்க்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சி பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பெரும்பாலும் மக்களுக்கு அவ்வளவாக அறிமுகம் இல்லாதவர்களே. இருப்பினும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் தங்களை அடையாளபடுத்தி கொள்வதோடு திரையுலகில் வலம் வரும் வாய்ப்பினையும் பெறுகின்றனர்.

இவ்வாறான நிலையில் வேறு நாடான இலங்கையிலிருந்து வந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் மக்களிடையே பெருமளவு அன்பையும் வரவேற்பையும் பெற்றவர் தான் லாஸ்லியா மரியநேசன். அந்த நாட்டில் பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மக்கள் மனதை கொள்ளை கொண்ட இவர் அதன் மூலம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றார்.

இவரது சுட்டித்தனமான செயலும் அழகான சிங்கள தமிழ் பேச்சும் மக்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் அந்த நிகழ்ச்சியில் கவின் மற்றும் இவரது காதல் காட்சிகள் இளைஞர்களை தனி ரசிகர் பட்டாளம் வரை கொண்டு சென்றது. இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் வெளியே வந்து தொடர்ந்து நான்கு படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் லாஸ்லியா மரியநேசன். மேலும் பல விளம்பர படங்களிலும் நடித்து வரும் இவருக்கும் குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் அவர்களுக்கும் திருமணம் ஆகா போகிறது பல தகவல்கள் ரசிகர்கள் பக்கம் இருந்து வந்த வண்ணம் உள்ளது.

இது கூறித்து கேட்ட போது அஸ்வினும் லாஸ்லியா மரியநேசன் இருவரும் சமீபத்தில் ஒரு சோப் விளம்பர படத்தில் ஒன்றாக நடித்துள்ளார்கள். அதற்காக இருவரும் போட்டோ சூட் எடுத்துள்ளார்கள் அதில் இருவரும் ஒன்றாக இருக்கும்படியான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைராளாகி வருகிறது. இதை பார்த்த அவரது ரசிகர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என பல விமர்சனங்களையும் கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.