பிக் பாக்ஸ் வனிதாவுக்கு திருமணமாக வில்லையாம்.. லவ்வும் செட் ஆ க லையாம்!புதிய ச ர் சை யை கிள ப்பியுள்ளார்! சமூக இணையதளத்தில் வெளியூட்டுள்ள வீடியோ ஒன்று வைர லாகிறது ..!!

சினிமா

நடிகை வனிதா விஜயகுமார் அவரின் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் பிரபலமானார் வனிதா.

நெகட்டிவ் ரீச் என்ற போதும் வனிதாவுக்கு பட வாய்ப்புகளும் சின்னத்திரை நிகழ்ச்சிகளும் குவிந்து வருகிறது. நிகழ்ச்சிகள் மூலம் ஒரு பக்கம் பிரபலமானாலும் தனது தனிப்பட்ட வாழ்க்கையின் மூலம் நடிகை வனிதா விஜயகுமார் பிரபலமாகி வருகிறார்.

அந்த வகையில் தான் நடிக்கும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து போட்டோக்களை வெளியிட்ட வனிதா, கருத்தம்மா நடிகை ராஜஸ்ரீயுடன் சேர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெறி படத்தில் விஜய்யும் சமந்தாவும் பேசிக்கொள்ளும் டயலாக்கை வைத்து இருவரும் டப்ஸ் மேஷ் செய்துள்ளனர்.

ராஜஸ்ரீ வனிதாவிடம் கல்யாணம் ஆயிடுச்சா என்று கேட்க அதற்கு வனிதா இல்லை என்கிறார்.அடுத்து யாராச்சும் லவ்வு என்று கேட்கிறார் ராஜஸ்ரீ அதற்கு செட் ஆகல என பதில் சொல்கிறார் வனிதா. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அதான் 3 தடவை கல்யாணம் ஆயிடுச்சே என கலாய்த்துள்ளனர்.