பிரபல காமெடி நடிகரின் மகன் தற்போது மாவட்ட கலெக்டர்!!! குவியும் வாழ்த்துகள்!!!!

சினிமா

பிரபல நடிகர்களான நடிகர் ரஜினி, முரளி, விஜய் போன்ற பல நடிகர்களுடன் காமெடியில் கலக்கிய நடிகஎ சின்னி ஜெயந்தின் மகன் சிவில் சர்வீசஸ் தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று தூத்துக்குடி மாவட்டத்தின் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்

ரஜினியின் ‘கை கொடுக்கும் கை’ படத்தின் மூலம் அறிமுகமாகி பல்வேறு முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து பிரபலமானவர் சின்னி ஜெயந்த். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவரது மகன் ஸ்ருஜன் ஜெய், கடந்தாண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் இந்தியாவிலேயே 75வது இடம் பிடித்தது மட்டுமின்றி முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று அசத்தினார்.

இதற்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர். குறிப்பாக தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் ரஜினியும், கமலும் தொலைபேசி வாயிலாக சின்னிஜெயந்தின் மகனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஸ்ருஜன் ஜெய், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தின் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் ஸ்ருஜனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்..

அதற்கு மேலும் பலர். ஒரு நடிகனின் மகன் நடிகனாகமல் ஒரு ரியல் ஹீரோவாக மாறியுள்ளார். என பலரும் பாராட்டி வருகின்றனர்.. இந்நிலையில் இவரின் குடும்ப புகைப்படம் வைரலாக பரவி வருகிறது மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்..