பிரபல தமிழ் நடிகை உ டல்ந லக்கு றைவால் கா ல மானார் – க த றி அ ழும் குடும்பத்தினரும் திரையுலகமும் ..

சினிமா

முன்னால் தமிழ் நடிகை ஜெயந்தி தற்பொழுது காலமானார் என்றும் அவருக்கு வயது 76 என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழிகளில் நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்தவர் முன்னால் நடிகை ஜெயந்தி. தமிழில் குறிப்பாக அன்னை இல்லம், நீர்க்குமிழி, கார்த்திகை தீபம், பாமா விஜயம், எதிர்நீச்சல், இரு கோடுகள், புன்னகை, வெள்ளி விழா, கொம்பேறி மூக்கன், செங்கோட்டை, உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஜெயந்தி.

ஜெமினி கணேசனுடன் ஜெயந்தி நடித்த திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆகின என்பதும் அதில் புன்னகை மற்றும் வெள்ளி விழா ஆகிய திரைப்படங்கள் அனைத்து தரப்பினர்களும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்நீச்சல் படத்தில் இவரது நடிப்பிற்கு மிகப்பெரிய பாராட்டு கிடைத்தது என்பதும் பாமா விஜயம் படத்தில் காமெடியில் கலக்கி இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை ஜெயந்தி சற்று முன்னர் இ றந்த தாக அவரது உறவினர்கள் அறிவித்துள்ளனர். இதனையடுத்து அன்னையின் ஆத்மா சாந்தி அடைய திரையுலகம் மற்றும் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னால் நடிகை ஜெயந்தியின் இறுதிச்சடங்கு பெங்களூருவில் இன்று நடைபெறும் என்றும் இதில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.