பிரபல நடிகர் அருண் விஜயின் மகளா இது..? இட இவ்வளவு பெரிய பொண்ணா நன்றாக வளர்த்து விட்டாரே ; புகைப்படத்தை பார்த்து வி யப்பான ரசிகர்கள்

சினிமா

தமிழ் சினிமாவில் பல வாரிசு நடிகர்கள் அன்றிலிருந்து இன்று வரை வந்த வண்ணம் தான் உள்ளார்கள்.இருப்பினும் இதில் ஒரு சில நடிகர்களே மக்கள் மத்தியிலும் சினிமாவிலும் பிரபலமாக உள்ளார்கள். அந்த வகையில் சூர்யா, கார்த்தி, அதர்வா, விக்ரம் பிரபு போன்ற பல நடிகர்கள் முன்னணி நடிகர்களாக வெள்ளித்திரையில் வலம் வருகின்றனர்.

ஆனால் இன்னும் பல நடிகர்கள் வாரிசு நடிகர்களாக சினிமாவில் நுழைந்தும் அவர்களுக்கு அந்த அளவிற்கு மக்களிடையே வரவேற்பு கிடைக்கவில்லை. இப்படியான வகையில் 90-களின் காலகட்டத்தில் வாரிசு நடிகராக அறிமுகமாகியும் பல படங்களில் தனது சிறப்பான நடிப்பை கொடுத்து இருந்தாலும் மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் அவ்வளவாக பிரபலமாகதவர் என்றால் அது பிரபல முன்னணி நடிகர் விஜயகுமாரின் மகனான அருண் விஜய் தான்

தமிழ் திரையுலகில் தற்போது தவிர்க்க முடியாத நட்சத்திரங்களில் ஒருவராக மாறியுள்ளார் நடிகர் அருண் விஜய்.சில ஆண்டுகள் தமிழ் திரையுலகில் பின்தங்கி இருந்த நடிகர் அருண் விஜய், என்னை அறிந்தால் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

இவரது நடிப்பில் தற்போது சினம், பார்டர் உள்ளிட்ட படங்கள் உருவாகி வரும் நிலையில், கூடிய விரைவில் வெளியாகவும் காத்துருக்கிறது.நடிகர் அருண் விஜய்க்கு ஆர்த்தி என்பவருடன் திருமணமாகி, ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள்.

இந்நிலையில் நடிகர் அருண் விஜய் தனது மகள் பூர்வியுடன் சமீபத்தில் அழகிய செல்பி எடுத்துள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், அருண் விஜய்யின் மகளா இது, நன்றாக வளர்த்து விட்டாரே என கூறி வருகின்றனர்.