பிரபல நடிகர் தல அஜித் மாஸ்க் கூட அணியாமல் பொது இடத்தில் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டுள்ளார் அதை சமீபத்தியத்தில் வெளியான புகைப்படங்கள்..

சினிமா

தல அஜித் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் அப்டேட்டுக்காக ரசிகர்கள் அனைவரும் வேண்டி வந்தனர்.

அதனை தொடர்ந்து தற்போது இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளார்.

மேலும் சமீபத்தில் தல அஜித் பொது இடத்தில் வலிமை அப்டேட் கேட்டு ரசிகர்கள் செய்த செயலை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் தற்போது தல அஜித் கருப்பு நிற கேப் மற்றும் ஷர்ட்டில் பொது இடத்தில் திடீரென்று காணப்பட்டுள்ளார். அவரை கண்ட ரசிகர்கள் பலரும் சூழ்ந்து அவருடன் செல்பி எடுத்துள்ளனர்.