பிரபல பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனியன் மகன் யார் தெரியுமா? ஹீரோவாக களமிறங்குகிறார் 

சினிமா

பட்டிமன்ற பேச்சுக்கள் மூலம் பிரபலமானவர் திண்டுக்கல் ஐ.லியோனி, இவருக்கு தமிழர்கள் மத்தியில் அறிமுகமே தேவையில்லை.

கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது பெற்றிருக்கும் திண்டுக்கல் லியோனிக்கு சினிமா மீதும் காதல் உண்டு. இவர் கங்கா கெளரி என்னும் படத்திலும் நடித்திருந்தார். ஆனால் தொடர்ந்து சொல்லிக்கொள்ளும்படி திரைவாய்ப்பு எதுவும் வரவில்லை.

இந்நிலையில் இவரது மகனான லியோ சிவக்குமார் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார், அழகிய கண்ணே என்ற இப்படத்தில் சஞ்சிதா ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார்.

இன்று முதல் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கிய நிலையில், படத்திற்கான பூஜை போட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.