பிரபல ரஜினி பட நடிகருக்கு பிறந்தநாள் பரிசாக வி வா கரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ள மனைவி !! திரையுலகை அ தி ரவைத்த சம்பவம் !!

சினிமா

கணவருடன் கடந்த 10 ஆண்டுகளாக உள்ள பிரச்சனைகள் காரணமாக விவாகாரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக நடிகர் நவாசுதீனின் மனைவி ஆலியா சித்திக் கூறியுள்ளார்.தமிழில் நடிகர் ரஜினிகாந்துடன் பேட்ட திரைப்படத்தில் நடித்து பிரபலமான நவாசுதீன் சித்திக்குக்கு இன்று பிறந்த நாள்.

பிறந்த நாள் பரிசாக அவரது மனைவி ஆலியா விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக தம்பதியினரிடையே குடும்பத் தகராறு இருந்ததே திருமண வாழ்க்கையை முடித்துக்கொள்ள காரணம் என கூறப்படுகிறது.

நவாசுதீன் சித்திக் தற்போது தனது சொந்த ஊரான உத்தரப்பிரதேசத்தில் உள்ள புதானாவில் இருக்கிறார்.

இதுகுறித்து பேசிய ஆலியா, நான் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன், ஆனால் அவர் பதிலளிக்கவில்லை. பிரச்சனைகள் குறித்து என்னால் இப்போதே பேச முடியாது, ஆனால், கடந்த பத்து ஆண்டுகளில் இருந்து எங்களுக்கு பிரச்சனைகள் உள்ளன என்று கூறினார். அவர் முசாஃபர்நகருக்கு புறப்படுவதற்கு முன்பே நான் அவருக்கு நோட்டிஸ் அனுப்பியிருந்தேன், அவர் பதில் அளிக்கவில்லை என கூறியுள்ளார்.

நவாசுதீன் மற்றும் ஆலியா ஆகியோர் 2009 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர், தம்பதிக்கு ஷோரா மற்றும் யானி சித்திக் என்ற பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.