பெற்ற குழந்தையை யார் கண்ணிலும் காட்டாமல் மறைத்துவைத்த நடிகை ஷ்ரேயா !! வெளிவந்த வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் !!

சினிமா

நடிகை ஸ்ரேயா சரண் தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார் அதன்பின் ஜெயம் ரவியுடன் ஜோடியாக மழை என்ற படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். அதனைத் தொடர்ந்து அம்மணிக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் தமிழ் மற்றும் தெலுங்கு என்று குவிந்தது.

பார்க்க உயரமாகவும் இருக்கிறார் நன்றாகவும் நடனமாடுகிறார் கவர்ச்சியில் தாராளம் காட்டுகிறார் இதை விட என்ன வேண்டும் என்று கமர்சியல் படங்களில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் ஷ்ரேயாவின் கால்ஷீட்டுக்காக காத்துக் கிடந்தனர்.

முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரேயா பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஜோடியாக சிவாஜி படத்தில் நடித்திருந்தார் அந்தப் படமும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது அதனைத் தொடர்ந்து விஜய், விஷால் தனுஷ் என்று முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து தனது மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டார். அதே நேரத்தில் தெலுங்கிலும் தனது தாராள நடிப்பால் ரசிகர்களை கையில் வைத்திருந்தார்.

ஸ்ரேயா ஆண்ட்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தனது காதல் கணவருடன் வெளிநாடுகள் சென்று சுற்றி வந்த ஸ்ரேயா அடிக்கடி ஏதாவது ரொமான்டிக்கான புகைப்படங்களை வெளியிட்டு வருவார். சமீபத்தில் தனது காதல் கணவருடன் மும்பையில் வீடு வாங்கி செட்டில் ஆனார்.

ஷ்ரேயாவிற்கு அழகிய பெண் குழந்தை ஒன்று 2020ஆம் ஆண்டில் பிறந்து உள்ளது இதுவரை தனது குழந்தையை வெளிக்காட்டாத ஸ்ரேயா முதல் முதலில் தன்னுடைய குழந்தையை வெளி உலகிற்கு காட்டியுள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் இது எப்போ என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். திரைத்துறையை சார்ந்தவர்களுக்கே சிலருக்கு தெரியாதாம் ஷ்ரியாவிற்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த அளவிற்கு சீக்ரெட் ஆக வைத்திருந்துள்ளார் ஸ்ரேயா. குறிப்பாக குழந்தையை மீடியா கண்ணில் காட்டாமல் மறைத்து வைத்து இருந்துள்ளார் ஸ்ரேயா.