பேஷன் என்ற பெயரில் மீண்டும் கன்றாவியான ஹேர் ஸ்டைலுக்கு மாறிய ஓவியா !! கழுவி ஊற்றும் ரசிகர்கள் !!

சினிமா

விமல் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் களவாணி. இத்திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஓவியா. இந்த படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றிருந்தாலும் அதற்கு அடுத்து அவர் நடித்து வந்த சில படங்கள் பெரிதாக பேசப்படவில்லை. இதனால் ஓவியா சினிமா வாய்ப்பு ஏதுமின்றி இருந்தார். சினிமாவை விட்டு விலகி இருந்த அவருக்கு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெற வாய்ப்பு கிடைத்தது.

அதன் பிறகு அவருக்கு ஏறுமுகம்தான். மக்கள் மனதில் தீராத இடம்பிடித்தவருக்கு அவருக்கென தனியான ரசிகர் பட்டாளமே உருவானது. ஓவியா ஆர்மி ஹேஸ்டாக் உருவாக்கி என சமூக வலைத்தளங்களின் ட்ரெண்ட் ஆக்கும் அளவிற்கு பிக்பாஸ் மூலம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்தார்.

அந்த நிகழ்ச்சியில் அங்கு இருப்பவர்கள் அனைவரும் ஒதுக்கிய போதும் ஆரவ் மட்டும் இவருக்கு ஆறுதலாக இருந்து வந்தார். இதனால் ஆரவிற்கும் ஓவியாவிற்கும் ஒரு இது என அதிகளவு கிசு கிசு பரப்பபட்டது. ஓவியாவும் நடிகர் ஆரவ்வை காதலிப்பதாக கூறினார். ஆனால் அந்த நேரத்தில் அதை மறுத்தார் நடிகர் ஆரவ்.

அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் ஆரவ்-ஓவியா ஜோடி வெளியில் ஒன்றாக சுற்றித் திரிந்தனர்.இவ்வாறு பல பஞ்சாயத்துக்களுக்கு பின்னர் பேசப்படும் நடிகையாக ஓவியா மாறினார்.இருப்பினும் அதிகமான படவாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை. சமீபத்தில் 90 எமேல் என்ற திரைப்படத்திலும் களவாணி படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்திருந்தார்.

இந்தநிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தபின்னர் டாம்பாய் லுக்கில் சுற்றிவந்தார்.தற்போது மீண்டும் தனது முடியை வித்தியாசமாக கட் செய்துள்ளார்.பேஷன் என்ற பெயரில் இப்படி ஒரு கண்றாவியான ஹேர்ஸ்டைலில் இருப்பதாக ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.