மூன்று குழந்தைகளுடன், தன் – 45 வது பிறந்தநாளை கொண்டாடிய ரம்பா!!! அதுலையும் மூத்தப்பொண்ணு அப்படியே ரம்பா மாதிரி இருக்காங்க பா!!

சினிமா

தமிழ் சினிமாவில் இடுப்பழகி சிம்ரன், புன்னகை அரசி ஸ்னேகா என்று பலருக்கும் பட்டம் இருப்பது போல தொடை அழகி என்ற வித்யாசமான பட்டத்துடன் நடிகைகளில் ஒருவராக நடிகை ரம்பா. சிம்ரன், ரோஜா, மீனா போன்ற முன்னணி நடிகைகள் இருந்த காலத்தில், சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார் நடிகை ரம்பா. 1993 ஆம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான உழவன் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான விஜய் அஜித் போன்ற ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தமிழ், தெலுகு, ஹிந்தி, மலாயாளம் என்று பல மொழி படங்களில் நடித்து காலாக்கி வந்த ரம்பா. தொடர்ந்து படங்களில் நடித்து ரம்பா பட வாய்ப்புகள் குறைந்ததால் கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திர குமார் பிரேமானந்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு 3 குழந்தைகளுக்கு தாயான பின்னரும் சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவர் என்று தனது கலை பயணத்தை தொடர்ந்து வந்தார்..ஏற்கனவே இரண்டு மகளை பெற்றுள்ள ரம்பாவிற்கு கடந்த 2018 ஆம் ஆண் குழந்தையும் பிறந்தது. பொதுவாக திருமணம் முடிந்தாலே நடிகைகள் சினிமாவில் தலை காண்பிப்பது ஒரு அரிதான விஷயம் தான். அதற்கு ரம்பா மட்டும் விதிவிலக்கல்ல. திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் நடிப்பதை சுத்தமாக நிறுத்திவிட்டார் ரம்பா.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை ரம்பா, மீண்டும் நடிப்பீர்களா என்று கேள்வி கேட்ப்பட்டதற்கு. நான் இப்போது நான் ஒரு தாய். பழையபடி டூயட் எல்லாம் முடியாது. எனக்கேற்றவாறு, நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது 45வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.