ம றை ந்த காமெடி நடிகர் விவேக் கடைசியா பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றை மன உருக்கத்துடன் நடிகர் சூர்யா வெளியிட்ட விடியோவை பார்த்து கண்கல ங்கிய ரசிகர்கள் ..!!

சினிமா

தமிழ் சினிமாவில் வைகைபுயல் வடிவேலுவுக்கு அடுத்தபடியாக காமெடி ஜாம்பவனாக திகழ்ந்து கொடிக்கட்டி பறந்தவர் நடிகர் விவேக். சமுக கருத்துக்கள் நிறைந்த காமெடிகளால் பல விருதுகளை பெற்று மக்கள் மனதை ஈர்த்தவர். நடிப்பு ஒருபுறம் இருக்க பல லட்சத்திற்கும் மேலான மரம் நடுவதில் பிரபலங்களுக்கு முன் உதாரணமாக இருந்து வந்தவர் விவேக்.

கடந்த ஏப்ரல் 16ல் மாரடைப்பு காரணமாக இந்த மண்ணைவிட்டு பிரிந்தார். அவரது உடல் விருகம்பாக்கத்தில் இருக்கும் அவரது வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், நடிகர் விவேக் பற்றிய அனுபவங்களை பிரபலங்கள் பகிர்ந்து கொண்டும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் சூர்யா நடிகர் விவேக் கடைசியாக பங்கேற்ற காமெடி ஷோ வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பல காமெடி நடிகர்கள் பங்கேற்ற எங்க சிரி பாப்போம் என்ற நிகழ்ச்சியில் நடிகர் சிவாவுடன் சேர்ந்து காமெடி அரட்டையை செய்துள்ளார் விவேக்.