யாருக்கும் சொல்லாமல் பிரபல தொழிலதிபருடன் திருமணத்தை முடித்த கார்த்தி பட நடிகை !! என்னங்க மாப்பிள்ளை இப்படி இருக்காரு ?? புகைப்படத்தை பாருங்க !!

சினிமா

தமிழ் திரைஉலகில் உதயன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயக திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் நடிகை பிரனிதா, இவர் தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தாலும் சொல்லும்படி இவர் பிரபலமாகவில்லை.

எனவே இவருக்கு தமிழில் படிப்படியாக திரைப்பட வாய்ப்புகள் குறைந்து கொண்டே போனது. இதனை தொடர்ந்து இவர் தமிழில் கடைசியாக நடித்த திரைப்படம் “கனேசனும் சுருளிராஜனும்” அதன் பிறகு அவர் தமிழ் சினிமாவில் ஒரு திரைப் படங்களிலும் நடிக்கவில்லை.

இவர் தமிழ் மொழியில் மட்டும் தனது நடிப்புத் திறனை காட்டவில்லை தெலுங்கு கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் தனது நடிப்பு திறமையை காட்டி உள்ளார் நடிகை பிரனிதா. தற்போது இந்தியில் பிசியாக இருக்கும் பிரனிதா அவர்கள் “ஹாங்கமா 2” என்ற மாஸான திரைப் படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்த திரைப்படத்தில் இவருடன் சில்பா ஷெட்டியும் நடித்து வருகிறார்கள். மேலும் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை தரும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது அதுமட்டுமல்லாமல் தனது கவ ர்ச்சியையும் குறை இல்லாமல் இந்த திரைப்படத்தில் காட்டியுள்ளதாக அரசல் புரசலாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எப்போதும் இன்ஸ்டா பக்கங்களில் ஆக்டீவாக இருக்கும் ப்ரணிதா ரசிகர்களுக்கு கூட எந்த ஒரு அறிவிப்பும் இன்றி தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

இவர் நிதின்ராஜு என்ற தொழிலதிபரை நேற்று உறவினர்கள் மத்தியில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தற்போது அவரது திருமண புகைப்படமே வெளியாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.அதோடு சிலர் திடீரென இப்படி திருமண செய்தி அறிவித்துள்ளாரே என கமெண்ட் செய்கின்றனர்.