‘ரஸ்னா’ விளம்பரத்தில் நடித்த குழந்தையா இது.? அட இந்த குழந்தை பிரபல முன்னணி நடிகையா.. யாரென்று நீங்களே பாருங்க ..!!

சினிமா

‘ரஸ்னா’ விளம்பரத்தில் நடித்த குழந்தையா இது.? அட இந்த குழந்தை பிரபல முன்னணி நடிகையா.. யாரென்று நீங்களே பாருங்க ..!!தொலைக்காட்சி பல விதமான விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டாலும், மக்களிடத்தில் ஒரு சில விளம்பரங்கள் தான் மிகவும் பிரபலமாகவும் மனதில் நிற்கும் அளவிற்கு இருக்கும், என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையி, 90களில் பிறந்தவர்களில் கவனத்தை அதிகளவில் ஈர்த்த தொலைக்காட்சி விளம்பரம் என்றால், அது “ரஸ்னா” குளிர்பானம் விளம்பரம் தான். மேலும், அந்த ரஸ்னா விளம்பரத்தில் ரஸ்னா குடிப்பது போல இருக்கும் குழந்தை யாருன்னு தெரியுமா..?அந்த குழந்தையின் பெயர் அங்கிதா ஜவேரி.

அங்கிதா ஜவேரி, விளம்பர படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் அவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் பிரபல இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த “லண்டன்” திரைப்படத்தில் நடிகர் பிரசாந்திற்கு நாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து, தெலுங்கு சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வந்த அங்கிதாவிற்கு திடீரென்று வாய்ப்புகள் குறையவே நீண்ட நாட்களாக காதலித்து வந்த ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் விஷால் ஜெகதாப்பை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு ,குடும்ப வாழ்க்கையில் புகுந்தார்.

மேலும்,அவர் தன்னுடைய முழு கவனத்தையும் குடும்ப பொறுப்பில் செலுத்தி வந்த அங்கிதாவிற்கு தற்போது அழகான ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.இந்நிலையில் அங்கீதாவுக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களையும்,பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றன…