“ரெண்டே ரெண்டு படம் தான் நடிச்சேன்…!!! கோவிலே கட்டிடாங்க..!!”சந்தோசத்தின் உச்சத்தில் சிம்பு பட நடிகை..!!

சினிமா

பொங்கல் வெளியீடாக தியேட்டர்களில் ரிலீஸான சிம்புவின் “ஈஸ்வரன்” மற்றும் ஹாட்ஸ்டாரில் ரிலீஸான ஜெயம் ரவியின் பூமி ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்திருப்பவர் தான் நடிகை நித்தி அகர்வால் அவர்கள். இளம் புதுவரவான நித்தி அகர்வாலுக்கு ரசிகர்கள் காதலர் தின பரிசாக கோயில் கட்டியிருப்பது அவரை வாயைப்பிளக்க வைத்திருக்கிறதாம்.

மேலும் நடிகை நித்தியின் சிலையை வைத்து கற்பூரம் காட்டி ஆரத்தி எடுத்து ரசிகர்கள் கும்பிடும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.

இதுகுறித்து பேசிய நடிகை நித்தி அகர்வால், “இது அவர்களின் காதலர் தின பரிசு என என்னிடம் சொன்னார்கள். நான் அப்படியே ஷா க் ஆ யி ட்டேன். இதை நான் எதிர்பார்க்கவே இல்லை.

அதேநேரம், என் மீது அன்பு பொழியுன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன் அவர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

அந்தக் கோயில் எங்கே இருக்கிறது என சரியாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், சென்னையில் ஒரு இடத்தில் இருப்பது மட்டும் தெரியும். என்னுடைய தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களால் அந்தக் கோயில் கட்டப்பட்டிருக்கிறது’’ என்று கூறி நெ.கி.ழ்.ந்தி.ருக்கிறார் நடிகை நித்தி அகர்வால்.