லாக்டவுனில் யாருக்கும் தெரியாமல் கல்யாணத்தை முடித்த சின்னத்திரை நடிகை!! சோகத்தில் ரசிகர்கள் !!! அட போங்கப்பா..

சினிமா

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் மந்திரம் என்ற நிகழ்ச்சியின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பெரும் புகழ் பெற்றவர் கிரிஜா. இவர் சென்னையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.. இரவு 10 மணிக்கு மேல் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில், இளைஞர்கள் மற்றும் கணவர்மார்கள் கேட்கும் அந்தரங்க கேள்விகளுக்கு டாக்டருடன் இணைந்து முகம் சுளிக்காமல் பதில் சொல்லி வருவார்… .

மேலும் அவர்கள் கேட்கும் கேள்விகளை வைத்தே அவர்களை கலாய்ப்பதன் மூலமாகவே இளைஞர்கள் மத்தியில் பெயர் பெற்றார்.. . இவருக்கு தோல் சம்பந்தமான படிப்பு படிக்கணும்னு ஆசையாம்.. ஆனால் அது நிறைவேறாததால், டிவி ஸ்க்ராலிங்கில் ஆடிஷன் சென்று அதன் மூலம் தான் சமையல் மந்திரம் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றினார்.

அதன் பின்னர் மும்பைக்கு சென்று தனது பட்டப்படிப்பை முடித்துள்ளார். சமையல் மந்திரம் நிகழ்ச்சியில் இவர் பணியாற்றியபோதே, பல்வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும், ஆனால், கிளாமர் ரோல் என்பதால் அதனை தவிர்த்துவிட்டதாகும் அவர் கூறியுள்ளார்… இப்போது அவர் ஒரு மேக்கப் ஆர்டிஸ்டாக பணியாற்றி வருகிறார்…

இந்நிலையில், தற்போது கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு அதிக மக்கள் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிரிஜாவுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. அவரின் திருமண புகைப்படங்களை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனைப்பார்த்து பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நாமும் அபப்டியே ஒரு வாழ்த்தை சொல்லிப்போம்… வாழ்க வளமுடன்…