விஜய்யின் மகனை ஹீரோவாக்குறேன் – களத்தில் இறங்கிய பிரமாண்ட இயக்குனர் – விஜய் கொடுத்த பதில்..!

சினிமா

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நட்சத்திரம். இவர் நடிப்பில் கடைசியாக இயக்குனர் அட்லி இயக்கிய பிகில் படம் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தின் இறுதிகட்டபடப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

வரும் ஏப்ரல் மாதம் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு இந்த படம் திரைக்கு வரவுள்ளது. நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது ஹீரோ ரேஞ்சுக்கு வளர்ந்துவிட்டார். சில குரும்படங்களிலும் நடித்துள்ளார்.

இதனால், இவரை ஹீரோவாக வைத்து படமெடுக்க இயக்குனர்கள் பலரும் முயற்சித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் முருகதாஸும் அந்த லிஸ்டில் இணைந்துள்ளார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர் விஜய்யின் மகனுக்காக ஒரு கதையை உருவாக்கி விஜய்யை அணுகினாராம். ஆனால், விஜய் மகன் படிப்பை முடித்து விட்டு அவனுக்கு விருப்பமான துறையை தேர்ந்தெடுத்து செல்லட்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றாராம்.

தன் மகனுக்கு பிடித்தால் மட்டுமே சினிமாவில் நடிப்பார் எனவும் விஜய் கூறி விட்டாராம். பொறுத்திருந்து பார்ப்போம்.