விருது தராததால் பிரபல மேடையில் மனம் வருந்தி கதறி அழுத பிரபல நடிகை !! இறுதியில் நடந்ததை பார்த்து கண் கலங் கிய ரசிகர்கள் ..!!!

சினிமா

பிரபல விஜய் டிவி நட்சத்திரங்கள் பலருக்கும் வருடம் தோறும் விஜய் டெலீவிஷன் அவார்ட்ஸ் என்ற பெயரில் விருதுகளை வழங்கி வருகின்றனர்.

இதில் விஜய் டிவி நிகழ்ச்சி பிரபலங்கள் மற்றும் சீரியல் நட்சத்திரங்களுக்கு விருதுகளை வாங்கி வருவதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் தற்போது நடந்துள்ள விஜய் டெலீவிஷன் அவார்ட்ஸ் 2021 நிகழ்ச்சியின் ப்ரோமோக்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது, மேலும் இந்த நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி ஒளிபரப்பாகவுள்ளது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புதிய ப்ரோமோவில் நடிகை தீபாவிற்கு விருதை அளிக்காததால் மனம் வருந்தியுள்ளார்.

மேலும் நடிகை தீபா தனக்கு விருதை அளித்திருந்தால் அவரின் அம்மாவின் போட்டோவை திரையில் காண்பிப்பதாக நினைத்ததாகவும், ஆனால் விருதை எனக்கு கொடுக்கவில்லை என வருந்தியுள்ளார்.