விரைவில் இரண்டாம் திருமணமா..?? நிச்சயதார்த்த வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகை அமலா பால்..!! தனது சந்தோஷத்தை வெளியிட்ட அற்புத தருணம்..!!

சினிமா

தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் கவனம் செலுத்தி வரும் அமலா பால் வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. அமலா பாலுக்கு அல்ல அவரின் தம்பி அபிஜித்துக்கு. அபிஜித்துக்கும், அல்கா குரியன் என்பவருக்கும் கேரளாவில் நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது.

அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார் அமலா பால். தன் வாழ்க்கையில் என்ன கஷ்டம் வந்தாலும் பக்க துணையாக இருப்பது தம்பி அபிஜித் தான் என்று அமலா பால் பலமுறை தெரிவித்திருக்கிறார்.

வீடியோவை பார்த்த ரசிகர்கள் அபிஜித்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் அமலா பாலுக்கு மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லையா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். இயக்குநர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்தார் அமலா பால்.

ஆனால் திருமணம் நடந்த வேகத்தில் இருவரும் பிரிந்துவிட்டனர். விவாகரத்திற்கு பிறகு அமலா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அவருக்கும், மும்பையை சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங்கிற்கும் திருமணம் நடந்துவிட்டதாக பேச்சு கிளம்பியது.

அதற்கு காரணம் பவ்னிந்தர் சிங் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்த புகைப்படங்கள். ஆனால் அந்த புகைப்படங்கள் போட்டோஷூட்டுக்காக எடுக்கப்பட்டவை என்றும், தங்களுக்கு திருமணம் நடக்கவில்லை என்றும் அமலா பால் பின்னர் விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)