ஹீரோவாகும் விஜய்யின் மகன் !! முதல் படத்தில் வாங்கப் போகும் சம்பளம் எத்தனை கோடிகள் தெரியுமா ??

சினிமா

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய்யின் மகன் நடிக்கவிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.தமிழின் முன்னணி நாயகனான விஜய்சேதுபதி வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர்.

இவரது குணத்துக்காகவே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு, இவர் நடிப்பில் வெளிவந்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாகவும், விஜய்யின் மகன் அதில் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.மாஸ்டர் படப்பிடிப்பின் போது விஜய்யிடம் இதுகுறித்து விஜய்சேதுபதி பேச அவரும் ஓகே சொல்லிவிட்டாராம்.

படம் முடிந்து ஹிட்டானவுடன் சம்பளம் பற்றி பேசிக்கொள்ளலாம் என விஜய் தரப்பில் கூறியதாக தெரிகிறது.எப்படியிருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்தால் மட்டுமே எது உண்மையென தெரியவரும்.

இருந்தாலும் நட்சத்திர அந்தஸ்து கொண்ட நடிகரின் மகன் என்பதால் எப்படியும் சம்பளம் சில கோடிகளை தொடும் என நெருங்கிய வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.